வணிகம்

சௌத் இந்தியன் வங்கி நிகர லாபம் 8% உயா்வு

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த சௌத் இந்தியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.351 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.325 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.1,878 கோடியிலிருந்து ரூ.1,875 கோடியாக உள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 4.40 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 2.93 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 அடி பாய்ந்த குட்டி... மகனால் பெருமையடைந்த விக்ரம்!

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

கூட்டாக செய்தியாளர் சந்திப்பு? தேஜஸ்வி படம் மட்டும்! வறுத்தெடுக்கும் பாஜக

முதல்முறையாக அடுத்தடுத்து டக்-அவுட்!! ஓய்வு பெறுகிறாரா? கோலி செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொடர் மழை! ஏற்காடு மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

SCROLL FOR NEXT