Coca-Cola India 
வணிகம்

கோகோ-கோலா இந்தியா லாபம் 73% சரிவு!

குளிர்பான நிறுவனமான கோகோ-கோலாவின் பாட்டில் பிரிவான இந்துஸ்தான் கோகோ-கோலா பீவரேஜஸ் லிமிடெட், 2024-25 நிதியாண்டின் நிகர லாபம் 73% சரிந்து ரூ.756.64 கோடியாக உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: இந்தியாவின் குளிர்பான நிறுவனமான கோகோ-கோலாவின் பாட்டில் பிரிவான இந்துஸ்தான் கோகோ-கோலா பீவரேஜஸ் லிமிடெட், 2024-25 நிதியாண்டின் அதன் நிகர லாபம் 73% சரிந்து ரூ.756.64 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் வருவாய் 9 சதவிகிதம் குறைந்து ரூ.12,751.29 கோடியாக உள்ளது.

வணிக நுண்ணறிவு தளமான டோஃப்லர் மூலம் அணுகப்பட்ட நிதி தரவுகளின் அடிப்படையில், மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டில் அதன் மொத்த வருமானம் மற்றும் பிற வருமானம் உள்பட 9.63% அதிகரித்து ரூ.12,864.36 கோடியாக உள்ளது என்றது.

ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பீவரேஜஸ் லிமிடெட் நிகர லாபம் ரூ.2,808.31 கோடியாகவும், அதன் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.14,021.55 கோடியாகவும் உள்ளது.

நிறுவனத்தின் மொத்த வரிச் செலவு 2025ல், 72% குறைந்து ரூ.247.98 கோடியாக இருந்தது. இதுவே கடந்த வருடம் ரூ.910.07 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், கோகோ-கோலா 40% பங்குகளை ஜூபிலண்ட் பாரதியா குழுமத்திற்கு விற்றது.

எட்டு வகைகளில் 37 வெவ்வேறு தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது கோகோ-கோலா. அதன் தயாரிப்பு வரிசையில் கோகோ-கோலா, தம்ஸ் அப், ஸ்ப்ரைட், மினிட் மெய்ட், மாஸா, ஸ்மார்ட் வாட்டர், கின்லே, லிம்கா மற்றும் ஃபாண்டா உள்ளிட்ட பானங்கள் இதில் அடங்கும்.

இதையும் படிக்க: 6 நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகம் புறம்... அனுஷ்கா சென்!

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

டைஸ் ஐரே படத்தின் டிரெய்லர்!

வியர்வை சிந்தும் வேலவர்!

அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT