வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றுள்ளன.
கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் வர்த்தகமான பங்குச் சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று மீண்டும் உயர்வடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,297.39 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 566.96 புள்ளிகள் அதிகரித்து 84,778.84 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170.90 புள்ளிகள் உயர்ந்து 25,966.05 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் மிட்கேப் குறியீடு 0.7%, ஸ்மால்கேப் குறியீடு 0.5% உயர்ந்தது. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, எடர்னல் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
அதே நேரத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
மீடியா, பார்மா தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் லாபமடைந்துள்ளன. உலோகம், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் குறியீடு 1-2% வரை உயர்ந்து நிறைவு பெற்றன.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை, அதிக வெளிநாட்டு முதலீடு உள்ளிட்டவை இந்திய பங்குச்சந்தையில் இன்று நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தென்கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய், ஷாங்காய் என ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று ஏற்றத்தில் வர்த்தமாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
கச்சா எண்ணெய் விலை 0.85% குறைந்து ஒரு பேரல் 65.38 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசா சரிந்து 88.26 ஆக நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.