கோப்புப்படம் 
வணிகம்

மீளுமா பங்குச்சந்தை? 300 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமான நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
84,625.71 புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. எனினும் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 312.55 புள்ளிகள் குறைந்து 84,466.29 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் தற்போது 73.85 புள்ளிகள் குறைந்து 25,892.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை நிஃப்டி 26,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. கடந்த 2024 செப்டம்பர் 27 ஆம் தேதி நிஃப்டி அதிகபட்சமாக 26,277 புள்ளிகளில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை, பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், நெஸ்லே ஆகியவற்றின் பங்குகள் 1%க்கும் குறைவாக சரிந்து வர்த்தமாகி வருகின்றன.

அதேநேரத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, அதானி போர்ட்ஸ், டைட்டன், மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் லாபம் ஈட்டின.

ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று சற்றே சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தை நேற்று(திங்கள்) ஏற்றத்துடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Stock market: Sensex falls over 300 pts, Nifty below 25,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மோந்தா புயல்: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!

வல்லபபாய் படேல் 150வது பிறந்தநாள்: பெரம்பலூரில் துண்டுப் பிரசுரம் வெளியீடு

பிகாரில் ஏன் முஸ்லிம் முதல்வராகக் கூடாது?: ஒவைஸி கேள்வி

SCROLL FOR NEXT