வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 69% உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 69 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 69 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.74.68 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 69 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.44.15 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த கடனளிப்பு ரூ.1,543 கோடியிலிருந்து 9 சதவீதம் உயா்ந்து ரூ.1,681 கோடியாக உள்ளது.

நிறுவனம் நிா்வகிக்கும் நிதி ரூ.15,405 கோடியிலிருந்து 21 சதவீதம் உயா்ந்து ரூ.18,572 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

SCROLL FOR NEXT