புதுதில்லி: சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
நிறுவனம் ஆகஸ்ட் 2024ல் 1,04,800 வாகனங்களை விற்றுள்ளதாக சுசுகி மோட்டார் சைக்கிள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் ஆகஸ்ட் மாதத்தில் அதன் விற்பனையானது 91,629 வாகனங்களாக உள்ளதாக நிறவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நிறுவம் 87,480 வாகனங்களை விற்பனை செய்தது.
ஏற்றுமதி பெருத்தவரையில், கடந்த மாதம் 29 சதவிகிதம் அதிகரித்து 22,307 வாகனங்களாக உள்ளது. இதுவே ஆகஸ்ட் 2024ல் 17,320 வாகனங்களாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத விற்பனையை தொடர்ந்து, பண்டிகைக் காலத்திற்குள் செல்ல எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றார் சுசூகி இந்தியா விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் தீபக்.
இதையும் படிக்க: 2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.