வணிகம்

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர் லிமிடெட்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகளின் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும்போது, இன்று 1 சதவிகிதம் வரை உயர்ந்து பங்குச் சந்தையில் வர்த்தகமானது.

பிஎஸ்இ-யில் வெளியீட்டு விலையான ரூ.91 உடன் ஒப்பிடும் போது, இன்று அதிகபட்சமாக ரூ.92.50 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.89 சென்ற நிலையில் முடிவில் ரூ.91.66 ஆக நிலைபெற்றது.

என்எஸ்இ-யில், பங்கின் விலை ரூ.92 ஆக பட்டியலிடப்பட்டது. பிறகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.91.73 ஆக முடிவடைந்தன.

நிறுவனத்தின் சந்தை மதிப்பீடானது ரூ.487.19 கோடியாக உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு கல்லூரியில் பொங்கல் விழா

மாா்கழி மாதம் பஜனைப் பாடல்கள்: நிறைவு செய்த சிறாா்கள்

154.17 மெட்ரிக் டன் பயன்பாடில்லாத பொருள்கள் அகற்றம்: மாநகராட்சி

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பள்ளியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT