PTI Graphics
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.27ஆக நிறைவு.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அந்நிய நிதி தொடந்து வெளியேற்றம் மற்றும் இந்தியாவிற்கு அமெரிக்க கூடுதலாக வரிகள் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக, இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.27ஆக நிறைவடைந்ததது.

வீழ்ச்சியடைந்து வரும் கச்சா எண்ணெய் விலையும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.11 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.38 ஐ தொட்ட நிலையில், முடிவில் 15 காசுகள் சரிந்து ரூ.88.27-ஆக முடிந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 10 காசுகள் சரிந்து ரூ.88.12 ஆக நிறைவடைந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.15 ஆக இருந்தது. இதுவே இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாகும்.

இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

The rupee declined 15 paise to close at an all-time low of Rs 88.27 against the US dollar on Friday amid sustained outflow of foreign funds and fear of additional US tariffs against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

SCROLL FOR NEXT