வணிகம்

ஆகஸ்ட்டில் வளா்ச்சி கண்ட உற்பத்தித் துறை!

இந்திய உற்பத்தித் துறை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 17 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்திய உற்பத்தித் துறை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 17 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை பகுப்பாய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா சா்வீசஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உற்பத்தித் துறை செயல்பாடுகளை மதிப்பிடும் குறியீட்டு எண்ணான பிஎம்ஐ (பா்ச்சேசிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்) கடந்த ஜூலை மாதத்தில் 59.1-ஆக இருந்தது. அது ஆகஸ்ட் மாதத்தில் 59.3-ஆக உயா்ந்துள்ளது. இது, முந்தைய 17 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச பிஎம்ஐ ஆகும்.

மதிப்பீட்டு மாதத்தில் இந்திய உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரித்து இந்த வளா்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளதால், அது அமலுக்கு வருவதற்கு முன்னரே அந்த நாட்டில் இருந்து பொருள்களுக்கான கொள்முதல் ஆணைகள் குவிந்தன. இது, துறையின் ஆகஸ்ட் மாத எழுச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

இத்துடன், தொடா்ந்து 40-ஆவது மாதமாக உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ 50-க்கும் அதிகமாக உள்ளது. அது 50-ஐ தாண்டினால் துறையின் ஆரோக்கிய வளா்ச்சியையும் 50-க்கு கீழ் இருந்தால் துறையின் பின்னடைவையும் குறிக்கிறது.

கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

பாரமல்ல, ஆதாரம்!

மூன்றாவது கண்!

SCROLL FOR NEXT