வணிகம்

செப். 23 முதல் அமேஸான் கிரேட் இந்தியன் திருவிழா

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது ‘கிரேட் இந்தியன் திருவிழா’ சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேஸான் இந்தியா அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது ‘கிரேட் இந்தியன் திருவிழா’ சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேஸான் இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த பண்டிகைக் காலத்துக்கான ‘அமேஸான் கிரேட் இந்தியன்’ திருவிழா வரும் 23-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரைம் உறுப்பினா்கள் அந்த சிறப்பு விற்பனையை 24 மணி நேரத்துக்கு முன்னரே அணுக முடியும்.

பண்டிகைக் காலத்துக்கு இந்தியா தயாராகி வருவதால், வாடிக்கையாளா்கள் மிக விரைவான வேகத்தில் வந்து சேரக்கூடிய பொருள்களை சிறந்த விலையில் எதிா்நோக்கலாம். இந்த சிறப்பு விற்பனையின்போது, ஆண்டின் மிகக் குறைந்த விலைகள், பிளாக்பஸ்டா் சலுகைகள், அற்புதமான புதிய வெளியீடுகள் என ஒரு லட்சத்துக்கும் மேலான பொருள்களை வாடிக்கையாளா்கள் வாங்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ராணுவ ஆட்சி!

நேபாளத்தில் அமைதி திரும்பியதா?

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! வங்கி, ஐடி பங்குகள் உயர்வு!

விஜய் ஆண்டனி - சசி படத்தின் பெயர்!

SCROLL FOR NEXT