வாரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,504.36 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 376.01 புள்ளிகள் அதிகரித்து 81,477.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118.65 புள்ளிகள் உயர்ந்து 24,987.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு, இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
முதல் நாள் ஆட்டோமொபைல் பங்குகள் விலை உயர்ந்த நிலையில் நேற்று ஐடி பங்குகள் உயர்ந்தன.
இன்றும் ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தில் இருந்து வருகின்றன. ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்கள் அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன.
எம்&எம், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எந்த சிரமமும் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதையடுத்து பங்குச்சந்தை நேர்மறையுடன் வர்த்தகமாகி வருகின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.
கச்சா எண்ணெய் விலை 0.87% உயர்ந்து ஒரு பேரல் 66.95 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.