பண்டிகைக் காலத்தையொட்டி ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 15 புதிய ரக பட்டுப் புடவைகளை ஆரெம்கேவி அறிமுகப்படுத்துகிறது.
விழாக் காலங்களில் ஆரெம்கேவி, நெசவாளர்களால் நெய்யப்பட்ட புதிய பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
பட்டு இழையை இலேசாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் காப்புரிமை பெற்ற நுட்பங்களால் உருவாக்கப்படும் இந்த பட்டுப் புடவைகள் புதுமையான உத்திகள், வழிமுறைகள் மூலம் மிகச் சிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டு வருகிறது.
கடந்த 100 ஆண்டுகளாக 110-க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டுப்புடவை ரகங்களை அறிமுகம் செய்த ஆரெம்கேவி, இந்தாண்டு நவராத்திரி, தீபாவளி என தொடர் பண்டிகை வருவதையொட்டி 15 புதிய ரக பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது.
இந்த படைப்புகள், ஜப்பானிய கலை மற்றும் இந்திய கலாசாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
ஷாஷிகோ ரிவர்சிபிள், ஜப்பான் கோர்வை, மவுண்ட் ஃபுஜி, நேச்சுரல் ஃபீச் கிரேடியன்ட், மோக்கா மௌஸ், வான் கோ லினோ, ராசலீலா, டபுளா லினோ வர்ணா, இயற்கை வண்ண செவ்வந்தி பூ, இயற்கை வண்ண முப்பாகம், கிரேடியன்ட் வர்ணா, கொட்டடி கட்டம், திரிகோண மாம்பழ புட்டா, குயில் கண் கோர்வை, குமோ கோர்வை என தனித்துவமான வண்ணங்களில் ஜரி வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட புதிய ரகங்கள் அறிமுகமாகின்றன.
கடந்த நூறாண்டு கால ஆரெம்கேவியின் பட்டுப் பயணத்தில் பல புதிய படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
1924 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் முதல் கடையைத் துவங்கிய ஆரெம்கேவி இன்று சென்னையில் தி.நகர் பனகல் பூங்கா, வடபழனி நெக்சஸ் விஜயா மால், வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என 3 கிளைகளுடன் மற்றும் கோயம்புத்தூர், பெங்களூருவில் இயங்கி வருகிறது.
தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை அறிமுகப்படுத்துவதோடு இல்லாமல் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில் மாடர்னைஸ்டு நுமேடிக் ஹேண்ட்லூம் (Modernised Pneumatic Handloom) என பெண்களும் எளிதாக நெய்யும் விதமாக புதியதொரு தறியை வடிவமைத்து நெசவாளர்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.