முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு.

Updated On : 17 செப்டம்பர், 2025 at 1:03 PM
பகிர்:

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவடைந்தது.

உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கும், அமெரிக்க-இந்திய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையையும் இது வெகுவாக உதவியது.

அமெரிக்க ஃபெட் வங்கி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கு மத்தியில் டாலர் பலவீனமடைந்து வருவதால் தொடர்ந்து நான்காவது அமர்வாக இந்திய ரூபாய் வலுப்பெற்று வருவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.84 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.86 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.87.71 ஐ தொட்ட நிலையில், முடிவில் 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84ஆக முடிந்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.09 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

summary

The rupee appreciated 25 paise to close at 87.84 against US dollar on Wednesday

முழு கட்டுரையைப் படிக்க →