கோப்புப் படம் Center-Center-Delhi
வணிகம்

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

அமெரிக்காவின் உயர் வரிகள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 8% பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக (இக்ரா) தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அமெரிக்காவின் உயர் வரிகள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவிகிதத்தை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆசிய ஏற்றுமதி நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக ஏற்றுமதியாளர்களுக்கு இது பாதகமாக உள்ளதால், இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

இதன் விளைவாக, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிகளால் நேரடியாக பாதிக்கப்படும்.

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படுவது சீனா, ஜப்பான், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு 15 முதல் 30 சதவிகித வரிகளை எதிர்கொள்வதால், இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாக ஏற்றுமதியாளர்களுக்கு இது பாதகமாக அமையும்.

அதே வேளையில், மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள உற்பத்தியாளர்கள் அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இது இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதான போட்டி அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வாகன உதிரிபாகங்களின் ஏற்றுமதி சீராக அதிகரித்து வருகிறது. நிதியாண்டு 2021ல் இது 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து, நிதியாண்டு 2022ல் இது 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், நிதியாண்டு 2023ல் இது 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், நிதியாண்டு 2024ல் இது 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், நிதியாண்டில் 2025ல் இது 7.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT