மும்பை பங்குச் சந்தை  IANS
வணிகம்

தொடர் இறக்கத்தில் பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தொடர்ந்து 5-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,574.31 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. காலை 11.30 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 118.32 புள்ளிகள் குறைந்து 81,605.69 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 30.70 புள்ளிகள் குறைந்து 25,026.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில் வார இறுதி நாளில் மட்டும் கடும் சரிவைச் சந்தித்தது. இந்த வாரமும் தொடர்ந்து 4-ம் நாளாக பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது முதலீட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், முந்தைய நாள்களை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை இன்று பெரிய அளவில் மாற்றமில்லாமல் (சென்செக்ஸ் 100 புள்ளிகள் வித்தியாசத்தில்தான்) உள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றும் ஐடி பங்குகள் சரிவில் உள்ளன.

துறைகளில் உலோக குறியீடு 1%, தொலைத்தொடர்பு 0.5% உயர்ந்த நிலையில் ஆட்டோ குறியீடு 0.5% சரிந்தது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.

அதானி பவர், ஹிந்துஸ்தான் காப்பர், டாடா மோட்டார்ஸ், கார்டன் ரீச், பிஎஸ்இ லிமிடெட் ஆகியவை நிஃப்டியில் அதிக செயலாக்கத்தில் உள்ள பங்குகளாகும். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளும் லாபமடைந்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

Stock Market : Nifty at 25,000, Sensex down 130 pts; auto, IT, realty down

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

ஓஜியால் பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்!

அறுவை சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு

கோவை உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

SCROLL FOR NEXT