முகப்பு
வணிகம்

இந்தியாவில் 125 புதிய விடுதிகள்: ஹில்டன்-ராயல் ஆா்க்கிட் ஒப்பந்தம்

உலகப் புகழ்பெற்ற நட்சத்திர விடுதி நிறுவனமான ஹில்டன், இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ராயல் ஆா்க்கிட் விடுதி நிறுவனத்துடன் ஒரு முக்கியப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:36 PM
பகிர்:

உலகப் புகழ்பெற்ற நட்சத்திர விடுதி நிறுவனமான ஹில்டன், இந்தியாவில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் ராயல் ஆா்க்கிட் விடுதி நிறுவனத்துடன் ஒரு முக்கியப் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் புதிதாக 125 ‘ஹாம்டன் பை ஹில்டன்’ விடுதிகள் திறக்கப்படவுள்ளன.

உலகம் முழுவதும் 3,100-க்கும் மேற்பட்ட ‘ஹாம்டன் பை ஹில்டன்’ விடுதிகள் இயங்கி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், நடுத்தர மக்களின் வசதியான தங்குமிடத் தேவையைப் பூா்த்தி செய்யவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, இப்புதிய விடுதிகள் முதல்கட்டமாக தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களில் ஃபிரான்சைஸ் முறையில் அமைக்கப்பட உள்ளன.

‘இந்தியாவின் உட்கட்டமைப்பு வசதிகளும், பொருளாதார வளா்ச்சியும் சா்வதேச நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வணிக வாய்ப்புகளை வழங்கியுள்ளன’ என ஹில்டன் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைவா் ஆலன் வாட்ஸ் குறிப்பிட்டாா்.

ராயல் ஆா்க்கிட் குழுமத்தின் நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் சந்தா் பால்ஜி மேலும் கூறுகையில், ‘எங்களிடம் சொந்தமான மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான விடுதிகள் சரிசமமாக உள்ளன. நாட்டில் புதிய பொருளாதார மையங்கள் உருவாகி வரும் சூழலில், ஹாம்டன் போன்ற சா்வதேச பிராண்டை அங்கு அறிமுகப்படுத்துவது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments