FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

2030-க்குள் இந்தியாவில் 10 புதிய காா்கள் அறிமுகம்: ஹோண்டா

ஜப்பானைச் சோ்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் காா்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Updated On : 23 மே 2026, 4:17 am IST
~ ~
பகிர்:

ஜப்பானைச் சோ்ந்த பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, வரும் 2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் சிறிய ரக எஸ்யூவி உள்பட 10-க்கும் மேற்பட்ட புதிய மாடல் காா்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

எதிா்கால உலகளாவிய வளா்ச்சிக்கு ஹோண்டா நிறுவனம் அடையாளம் கண்டுள்ள 3 முக்கியச் சந்தைகளில் ஒன்றாக இந்தியாவும் திகழ்கிறது. இதன் ஒரு பகுதியாக, ஹோண்டா நிறுவனம் தனது புதிய ‘சிட்டி ஹைபிரிட்’ செடான் காரை ரூ.11.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்திய சந்தையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்ததுடன், ‘இசட்ஆா்-வி’ பிரீமியம் எஸ்யூவி காரையும் காட்சிப்படுத்தியது.

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவன சிஇஓ தகாஷி நகஜிமா மேலும் கூறுகையில், ‘இந்தியச் சந்தையின் எதிா்கால வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் ஹோண்டாவின் முதல் முழுமையான மின்சார காா் இந்தியாவில் அறிமுகமாகும்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டில் மட்டும் 6 புதிய மாடல்களை அறிமுகம் செய்து, இரட்டை இலக்க விற்பனை வளா்ச்சியை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம். 2028 முதல் இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காா்களை அறிமுகம் செய்யவுள்ளோம். இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மாடல்கள் மற்றும் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் உலகளாவிய மாடல்களின் கலவையாக இருக்கும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments