முகப்பு
வணிகம்

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 2,072.67 புள்ளிகள் உயர்ந்து 83,739.13 ஆகவும், நிஃப்டி 639.15 புள்ளிகள் உயர்ந்து 25,727.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 11:28 AM
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: இந்திய-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, உள்நாட்டில் பங்குச் சந்தைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஏற்றத்துடன் தொடங்கி, ஆரம்ப வர்த்தகத்தில் வெகுவாக உயர்ந்தன.

அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்களின் வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், பங்குச் சந்தையில் குறியீடுகள், சந்தை தொடங்கிய உடனேயே சாதனை அளவிலான உச்சத்தை தொட்டது.

நிஃப்டி 50 குறியீடு 1,219.65 புள்ளிகள் உயர்ந்து 26,308.05 ஆக வர்த்தகமானது. அதே நேரத்தில் சென்செக்ஸ் 3,656.74 புள்ளிகள் உயர்ந்து 85,323.20 ஆக வர்த்தகமானது.

நிஃப்டி 100 கிட்டத்தட்ட 4% உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடும் 4.6% அதிகரித்தது. அதே நேரத்தில் நிஃப்டி மிட்கேப் குறியீடு 4.05% உயர்ந்தன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ 5% உயர்ந்தது, நிஃப்டி ஐடி 5.85%, நிஃப்டி எஃப்எம்சிஜி 1.8%, நிஃப்டி மெட்டல் 3.88%, நிஃப்டி பார்மா 4.27% மற்றும் நிஃப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 4.25% உயர்ந்தன.

வேதாந்தா பங்குகள் 3.38% உயர்ந்து ரூ.683 ஆகவும், ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 2.8% உயர்ந்து ரூ.627 ஆக வர்த்தகமானது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்த அறிவிப்பும், இந்தியாவுக்கான வரிகளைக் குறைத்து 18% ஆக நிர்ணயிக்க அமெரிக்கா எடுத்த முடிவும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு ஒரு திருப்புமுனையாகும்.

பிற்பகல் வர்த்தகத்தின் போது, ​​பிஎஸ்இ குறியீடு 2,411.07 புள்ளிகள் உயர்ந்து 84,065.30 ஆக வர்த்தகமானது. நிஃப்டி 742.30 புள்ளிகள் உயர்ந்து 25,828.35 ஆக இருந்தது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 2,072.67 புள்ளிகள் உயர்ந்து 83,739.13 ஆகவும், நிஃப்டி 639.15 புள்ளிகள் உயர்ந்து 25,727.55 புள்ளிகளாகவும் நிலைபெற்றது. ஒப்பந்தத்தின்படி, இந்தியப் பொருட்களுக்கான மீதான பரஸ்பர வரியை வாஷிங்டன் 18% குறைக்கும்.

சென்செக்ஸில் இன்று அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், பவர் கிரிட், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் கணிசமாக உயர்ந்தன. மறுபுறம் டெக் மஹிந்திரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் சரிந்தன.

இந்த வர்த்தக ஒப்பந்தம் ஜவுளி, தோல், நகை மற்றும் ரத்தினங்கள், கடல் உணவு ஏற்றுமதி மற்றும் சிறப்பு இரசாயனங்கள் ஆகிய பங்குகளை வெகுவாக உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், நேற்று (திங்கள்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,832.5 கோடி பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,446.3 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.

சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.44% சரிந்து 65.99 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

The domestic equity markets opened with a historic rally surging sharply in early trade, supported by upbeat global cues following the announcement of a key India-US trade deal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.