முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், பார்மா பங்குகள் உயர்வு!!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 16 பிப்ரவரி 2026, 11:39 am IST
பகிர்:

வாரத்தின் முதல் வா்த்தக நாளான இன்று(பிப். 16, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை 82,480.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 150.63 புள்ளிகள் அதிகரித்து 82,777.39 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52.85 புள்ளிகள் உயர்ந்து 25,523.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில், பவர் கிரிட், ஹெச்டிஎப்சி வங்கி, ஐஷர் மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை 3 சதவீதம் வரை உயர்ந்து முன்னணியில் இருந்தன. மறுபுறம், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி இந்தியா ஆகியவை 1.6 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின.

நிஃப்டி மிட்கேப் 100, ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 0.11 சதவீதம் சரிந்துள்ளன.

நிஃப்டி துறைரீதியாக மருந்து, ரியல் எஸ்டேட், தனியார் வங்கி, நுகர்வோர் பொருள்கள் குறியீடு லாபம் கண்ட நிலையில், ஐடி, ஆட்டோ, உலோகம், பொதுத்துறை வங்கி பங்குகள் சரிந்து வணிகமாகின்றன.

நிஃப்டி ரியல் எஸ்டேட் குறியீடு 0.79 சதவீதம், பார்மா 0.72 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது. நிஃப்டி ஐடி, ஆட்டோ குறியீடுகள் முறையே 0.63 சதவீதம், 0.50 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

summary

Stock Market: Sensex up 150 pts; Nifty near 25,500; pharma, realty stocks lead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.