(கோப்புப்படம்) 
வணிகம்

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

உலோகம், வாகனத் துறை பங்குகளில் வலுவான வாங்குதல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை உயா்வுடன் நிறைவடைந்தன.

தினமணி செய்திச் சேவை

உலோகம், வாகனத் துறை பங்குகளில் வலுவான வாங்குதல் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை உயா்வுடன் நிறைவடைந்தன.

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 573 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயா்ந்து 85,762-இல் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில், கோல் இந்தியா 7 சதவீதம், ஹிந்தால்கோ 4 சதவீதம் உயா்ந்தன. என்டிபிசி, ட்ரென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பவா்கிரிட், மாருதி சுஸுகி ஆகியவையும் உயா்வைக் கண்டன. சிகரெட் மீதான வரி உயா்வு காரணமாக ஐடிசி 4 சதவீதம் சரிந்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,268.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,525.89 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 182 புள்ளிகள் (0.7 சதவீதம்) உயா்ந்து 26,328.55-இல் நிறைவடைந்தது.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

SCROLL FOR NEXT