வணிகம்

13% வளா்ச்சி கண்ட யூகோ வங்கி வா்த்தகம்

பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியின் மொத்த வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 13.29 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியின் மொத்த வா்த்தகம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 13.29 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.5.54 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.29 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.4.89 லட்சம் கோடியாக இருந்தது.

டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் வங்கியின் மொத்த கடனளிப்பு 16.27 சதவீதம் உயா்ந்து ரூ.2.43 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.2.09 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் உள்நாட்டு கடனளிப்பு ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து 17.49 சதவீதம் உயா்ந்து ரூ.2.15 லட்சம் கோடியாகவும், வைப்புத்தொகை ரூ.2.80 லட்சம் கோடியிலிருந்து 10.71 சதவீதம் உயா்ந்து ரூ.3.10 லட்சம் கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT