கோப்புப் படம் 
வணிகம்

வெனிசுவேலா மீதான தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு!

புவிசார் அரசியல் குறித்த எச்சரிக்கையான மனநிலைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,197 ஆக உள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: புவிசார் அரசியல் குறித்த எச்சரிக்கையான மனநிலைக்கு மத்தியில், இன்றையை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,197 ஆக உள்ளது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜனவரி மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் 18,270 லாட் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு 0.81% உயர்ந்து ரூ.5,197 ஆக உள்ள நிலையில், பிப்ரவரி மாத ஒப்பந்தத்தில் 3,011 லாட் வர்த்தகத்தில், பீப்பாய்க்கு 0.72% உயர்ந்து ரூ.5,202 ஆக உள்ளது.

சர்வதேச சந்தைகளில், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 0.24% உயர்ந்து பீப்பாய்க்கு 57.46 அமெரிக்க டாலராக உள்ளது. அதே நேரத்தில் நியூயார்க்கில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்து பீப்பாய்க்கு 60.78 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடாக வெனிசுவேலா இருப்பதால், விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் குறித்த கவலைகளுக்கு இடையில் சந்தை எச்சரிக்கையாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

சென்செக்ஸ் 780 புள்ளிகள் சரிவு! 500% வரிவிதிப்பு மசோதா எதிரொலி.. 4-வது நாளாக வீழ்ச்சி!!

போர்நிறுத்தம்? இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன சிறுமி கொலை; 424 உயிர்ப் பலிகள்!

அரசியல்வாதி விஜய்யை எதிர்கொள்ளுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் சவால்!

மெக்கல்லம் பயிற்சியாளராக தொடர்வதை விரும்புகிறேன்: பென் ஸ்டோக்ஸ்

SCROLL FOR NEXT