கடந்த வார இறுதியில் ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 5) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,640.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 50.41 புள்ளிகள் குறைந்து 85,706.03 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.05 புள்ளிகள் குறைந்து 26,319.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகவும் எச்சிஎல்டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகவும் உள்ளன.
நிஃப்டியில் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவை லாபம் ஈட்டிய நிறுவனங்களாகவும் எச்சிஎல்டெக், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகவும் இருந்தன.
நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.41 சதவீதம் உயர்ந்தது, அதேசமயம் நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.07 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறார் .
துறைவாரியாகப் பார்க்கும்போது நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்து அதிக இழப்பைச் சந்தித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.