மும்பை: அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை மற்றும் பலவீனமான ஆசிய சந்தைகள் குறித்த கவலைகளால் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவை சந்தித்து, நிஃப்டி 26,150-க்கு கீழே சென்று வர்த்தகத்தை நிறைவு செய்தது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 102.20 புள்ளிகள் சரிந்து 84,961.14 ஆகவும், நிஃப்டி 37.95 புள்ளிகள் சரிந்து 26,140.75 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.5% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.12% அதிகரித்தது.
சென்செக்ஸில் மாருதி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டைட்டன், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை உயர்ந்தன.
நிஃப்டி-யில் டைட்டன் நிறுவனம், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, ஜியோ ஃபைனான்சியல் உள்ளிட்டவை உயர்ந்தும், அதே சமயம் சிப்லா, மாருதி சுசுகி, மேக்ஸ் ஹெல்த்கேர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், பவர் கிரிட் ஆகியவை சரிந்தன.
நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறை பங்குகள் 0.5 முதல் 1.8% வரை உயர்நதன. அதே சமயம் ஆட்டோமொபைல், எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்புத் துறை பங்குகள் தலா 0.5% சரிந்தன.
பங்குச் சார்ந்த நடவடிக்கையில், வலுவான 3-வது காலாண்டு வணிக செயல்திறன் காரணமாக டைட்டன் நிறுவனப் பங்குகள் 4% உயர்ந்து 52 வார உச்சத்தை எட்டியது. 3-வது காலாண்டு வருவாய் 51% அதிகரித்ததைத் தொடர்ந்து சென்கோ கோல்ட் பங்குகள் 12% உயர்ந்தன.
மார்கன் ஸ்டான்லி தரமிறக்கியதைத் தொடர்ந்து இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனப் பங்குகள் 1% சரிந்தன. 13.26 லட்சம் பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து பிளிஸ் ஜிவிஎஸ் பார்மா பங்குகள் 3% உயர்ந்தன. ஒரு மாத லாக்-இன் காலம் முடிந்த நிலையில் மீஷோ பங்குகள் 5% சரிந்தன.
டொரண்ட் பார்மா, டைட்டன் நிறுவனம், ஜேபி கெமிக்கல்ஸ், என்எம்டிசி, எம்சிஎக்ஸ் இந்தியா, பிஹெச்இஎல், நால்கோ, பாலிகேப், எம்க்யூர் பார்மா, லாரஸ் லேப்ஸ், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், ஐஷர் மோட்டார்ஸ், கிரானுல்ஸ் இந்தியா, வேதாந்தா, ஃபீனிக்ஸ் மில்ஸ், நெஸ்லே, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் உள்ளிட்ட சுமார் 140 பங்குகள் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
மறுபுறம் வேதாந்த் ஃபேஷன்ஸ், பிரீமியர் எனர்ஜீஸ், மகாநகர் கேஸ், வேர்ல்பூல், ஏடபிள்யூஎல் அக்ரி, டிக்சன் டெக்னாலஜிஸ், கோஹன்ஸ் லைஃப், அஃப்கான்ஸ் இன்ஃப்ரா, கேய்ன்ஸ் டெக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
சர்வதேச ப்ரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 0.81% சரிந்து 60.21 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.