கொல்கத்தா: சரக்கு வேகன்களைத் தயாரித்து வழங்குவதற்காக ஏபிஎல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.64 கோடி மதிப்புள்ள ஒப்பந்த கடிதத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது டெக்ஸ்மாகோ ரயில் & இன்ஜினியரிங் லிமிடெட்.
ஏசிடி-1 வகை வேகன்களும், பிவிசிஎம் வகை பிரேக் வேன்களையும் தயாரித்து வழங்குவது இதில் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த வேகன்கள் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றும், இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என்றார் டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதிப்தா முகர்ஜி.
ஏசிடி-1 வேகன், சரக்குகளை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அட்வென்ட்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.