மும்பை: டாலரின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு உள்ளிட்ட காரணங்களால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதன் குறைந்த மட்டங்களிலிருந்து மீண்டு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிலைபெற்றது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இரு தரப்பினரும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை மேம்பட்டதாக அந்நியச் செலாவணி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நிலையற்ற அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், ரூபாய் மீதான அழுத்தம், அதன் மீட்சியைத் தடுத்தது. இருப்பினும், இந்த வாரம் வெளியிடப்படவுள்ள உள்நாட்டு மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தரவுகளின் குறிப்புக்காக வர்த்தகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ.90.23 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தக நேரத்தின் இடையே ரூ.90.13 சென்று வலுப்பெற்ற நிலையில், பிறகு ரூ.90.25 என்ற குறைந்தபட்ச அளவை தொட்டது. இறுதியில், அதன் முந்தைய நாள் இறுதி நிலையிலிருந்து 2 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.90.16 என்ற அளவில் நிலைபெற்றது.
வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.28 காசுகள் சரிந்து ரூ.90.18 என்ற அளவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.