மும்பை: இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் சற்று உயர்ந்த நிலையில், முடிவில் 6 காசுகள் சரிந்து ரூ.90.29 ஆக நிலைபெற்றது.
அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணமாக இந்திய ரூபாய் எதிர்மறையான போக்கில் வர்த்தகமானதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பணவீக்கம் குறைந்து வருவதால் வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், ரூபாய் 90.26 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு நாளின் குறைந்தபட்ச அளவான ரூ.90.30 சென்ற நிலையில், அதிகபட்சமாக ரூ.89.94 என்ற நிலையைத் தொட்டது. இறுதியாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் முடிவை விட 6 காசுகள் குறைந்து ரூ.90.29 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.90.23 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.