புதுதில்லி: எண்ணெய் முதல் உலோகங்கள் வரையிலான தொழில்களைக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்த மாதம் இதுவரை வேதாந்தா பங்குகள் சுமார் 12% உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ-யில் 6.06% உயர்ந்து ரூ.675.70ஆக நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு சுமார் 6.63% உயர்ந்து ரூ.679.40 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில், வேதாந்தா பங்குகள் 6.04% உயர்ந்து ரூ.675.75 ஆக இருந்தது.
இந்த விலை உயர்வால், வர்த்தகம் நிறவடைந்த போது, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,64,224.92 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு, இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 36% உயர்ந்தது.
பங்குச் சந்தையில் நிலவிய மந்தமான போக்கிற்கு முற்றிலும் மாறாக வேதாந்தா பங்குகள் விலை உயர்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.