மும்பை: வலுவான டாலர் தேவை மற்றும் தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.90.97 என்ற புதிய வரலாறு காணாத சரிவில் நிறவடைந்தன.
அமெரிக்க விரிவாக்க கொள்கை உள்பட அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள், வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை மதிப்பை அழுத்தத்தில் வைத்திருப்பதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ள நிலையில், தொடர்ந்து வெளியேறி வெளிநாட்டு மூலதனம் மற்றும் மந்தமான உள்நாட்டுப் பங்குச் சந்தை உள்ளிட்டவையால் இந்திய ரூபாய் அழுத்தத்தில் இருப்பாதாக தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.91 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தகம் செல்ல செல்ல சரிவை சந்தித்து, ஒரு கட்டத்தில் ரூ.91.06 என்ற நாளின் குறைந்தபட்ச நிலையைத் தொட்டு, இறுதியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.97 என்ற எல்லா காலத்திற்குமான குறைந்தபட்ச அளவில் நாளின் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
நேற்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.90.90 என்ற அளவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.