எம்ஜி மோட்டர் நிறுவனத்தின் புதிய காரான எம்ஜி மெஜஸ்டர் பிப்ரவரி 12-ல் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எம்ஜி மெஜஸ்டரின் சிறப்பம்சங்கள்..
இந்த எஸ்.யு.வி. கார், பரவலாக அறியப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலுடன் நேரடியாப் போட்டியிடத் தயாராக உள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் கம்பீர தோற்றத்துடன் 7 பேர் இருக்கைக் கொண்டதாகும். இந்த காரில் 2.0 லிட்டர் டிவின் டர்போ டிசல் என்ஜின் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரில் மூன்று பகுதி எல்இடி விளக்கு அமைப்பு, செங்கோண வடிவ டிஆர்எல்கள் மற்றும் கிடைமட்ட ஸ்லாட்டுகளுடன் கூடிய கருப்பு நிற கிரில் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். இதில் 213 பிஎச்பி பவரையும், 479 எம்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
டூயல் டோன் 19 அங்குல அலாய் வீல்கள், கருப்பு நிற டோர் ஹேண்டில்கள், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா உள்பட பலவேறு அம்சங்கள் நிறைந்துள்ளன.
எம்ஜி எஸ்யூவி கார்கள் பொதுவாக நல்ல இடவசதியையும், நீளம், அகலம் கொண்டதாக இருக்கும். அதே சொகுசு, செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளியாகவுள்ள மெஜஸ்டர் கார் மக்களிடையே பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பொருந்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.