பட்ஜெட் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக ரூ.2 லட்சத்துக்கும் மேல் தங்கம் வாங்க பான் அவசியம் என்ற விதிமுறை திருத்தப்படுமா என்பதும் ஒன்றாக உள்ளது.
பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட், மாதச் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியதாரர்கள், தங்கம் வாங்க நினைத்திருப்பவர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேவேளையில், பொருளாதார நிபுணர்கள், மத்திய பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளை அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, தற்போது தங்கம் வாங்கும்போது அதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, நகைக் கடைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வழங்கும்போது, வாங்குபவரின் ஆதார் எண் இணைக்கப்பட்ட பான் அட்டையை வழங்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், இந்த விதிமுறை கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரூ.2 லட்சத்துக்கு பல சவரன் தங்க நகைகள் வாங்கலாம். ஆனால், இப்போது ஒரு சவரன் நகைதான் வாங்க முடியும்.
எனவே, ஒன்றரை சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட, ஏழை எளிய மக்கள் பான் கார்டு கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண சிறிய கடைகளில், குறைந்தபட்ச நகை வாங்குவோருக்கும் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனை நீக்க, பான் கார்டு கொடுக்கும் உச்ச வரம்பு தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியிருக்கிறார்.
அந்த தொகை ஏழைகளுக்கு எட்டாத தொகையாக மாற்றப்பட்டால்தான், சிறு வணிகர்களும் நிம்மதியாக வியாபாரம் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களும் குறைந்தது ஒரு சவரன் தங்க நகையையாவது எந்த தொல்லையும் இன்றி வாங்க முடியும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.