ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவுடன் ரூ. 94.03 ஆக நிறைவு!
ரூபாயின் மதிப்பு டாலர் ஒன்றுக்கு ரூ. 94 என்ற எல்லையை கடந்து ரூ. 94.03 ஆக நிறைவு.
மும்பை: அதிகரித்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களை அச்சத்தில் உறைய செய்ததால், ரூபாயின் மதிப்பு முதன்முறையாக டாலர் ஒன்றுக்கு ரூ.94 என்ற எல்லையை கடந்து இன்று 50 காசுகள் சரிந்து ரூ. 94.03 என்ற புதிய வரலாறு காணாத குறைந்தபட்ச அளவில் நிறைவு செய்தது.
வலுவடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகியவற்றால் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாக இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 93.84 ஆக தொடங்கி, நாள் முழுவதும் சரிவைச் சந்தித்தது. பிறகு டாலருக்கு நிகராக முதன்முறையாக ரூ. 94 என்ற எல்லையை கடந்து, முந்தைய நாள் முடிவிலிருந்து 50 காசுகள் குறைந்து ரூ. 94.03 ஆக நிலைபெற்றது.
கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பு 64 காசுகள் சரிந்து ரூ. 93.53 ஆக இருந்தது.