மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். 
தமிழ்நாடு

4 நாள் தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா உள்பட 4 நாள் தொடர் விடுமுறையையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை திங்கள்கிழமை அதிகரித்தது.

DIN

கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா உள்பட 4 நாள் தொடர் விடுமுறையையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை திங்கள்கிழமை அதிகரித்தது.
சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பல்லவர் கால கற்சிற்பங்களுக்கு பெயர் போனது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, , கிருஷ்ண ஜயந்தி, சுதந்திர தினம் என 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடற்கரை கோயில், அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, பழைய மற்றும் புதிய கலங்கரை விளக்கம், புலிக்குகை, வராகமண்டபம் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.
பயணிகளின் வருகை அதிகரித்ததால், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடற்கரை சாலை, அரச்சுணன் தபசு ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT