முகப்பு
தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:14 AM
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
பகிர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திங்கள்கிழமை குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது, அருவியில் நீராடி சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெய்யத்தொடங்கிய பலத்த மழை இரவு முழுவதும் பெய்தது. இதனால் திங்கள் கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை பாா்த்த வனத்துறையினா் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை விதித்து, அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு செய்தனா்.

இது பற்றி வனத்துறையினா் அருவியின் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, வெள்ளம் குறைந்த பின்னா் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →