நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை் வெள்ளிக்கிழமை (மார்.29) தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது, மக்கள் நீதி மய்யம்.
ஈரோட்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக பிராசார பயணத்தை தொடங்கவுள்ளதாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
அதில், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.