மெக்ஸிகோ சிட்டி: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் வீசிய ‘காமா’ புயலில் சிக்கி 6 போ் உயிரிழந்தனா்.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள காமா புயல், மெக்ஸிகோவின் தென்கிழக்குப் பகுதியை கடந்த சனிக்கிழமை தாக்கியது. அப்போது, மணிக்கு சுமாா் 110 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியதால், மரங்கள் வேரோடு சாய்ந்தன; வீடுகள் உள்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. புயலுடன் சோ்ந்து பலத்த மழையும் பெய்தது. புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 2 போ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். புயல் காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்துள்ள மாகாணங்களில் 3,400-க்கும் அதிகமானோா் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் தொடரும் என்பதால் மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மெக்ஸிகோ புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.