காந்தி 150

கலப்பு மணம் பற்றி காந்திஜி

காங்கிரஸை சீர்திருத்தி

DIN

காங்கிரஸை சீர்திருத்தி அமைப்பது, கஷ்டத்திற்குள்ளானவர்களுக்கு தொழில் தேடிக் கொடுத்து நிலையான வாழ்க்கை நடத்த உதவி செய்வது. இவற்றிற்காக ரூ.11,13,000 செலவில் ஒரு திட்டம் காந்திஜியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கான்டாய் ஸப் டிவிஷன் காங்கிரஸ் நிர்வாக கமிட்டி, கேளிகளாய் வடிகால் வசதிகள் கமிட்டி இவற்றின் நிர்வாக மெம்பர்கள்,ஊழியைகள், மாணவர்கள், ஹரிஜனங்கள் ஆகியோர் காந்திஜியை பேட்டி கண்டு இந்த திட்டத்தை சமர்ப்பித்தனர்.

மாதர்களுக்கு காந்திஜி கூறிய புத்திமதியாவது:-

வீட்டுக் காரியங்களைச் செய்வதன் மூலமும் மாதர்கள் தேசத்திற்கு சேவை செய்ய முடியும். தங்கள் பெண்களை விவாகத்துக்குத் தகுதியுள்ளவர்களாகவும், மகன்களை சம்பாத்தியம் செய்வதற்கு திறமையுள்ளவர்களாயும் ஆக்குவதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அம்மாதிரி குடும்பங்கள் தேச சேவை செய்வதாக சொல்ல முடியாது. தம்பதிகள் குடும்ப காரியங்களை கவனிப்பது குழந்தைகளை பராமரிப்பது இவைகளை செய்த பின்னரும் தேச சேவைக்காக நிறைய அவகாசம் செலவிட முடியும்.

சமபந்தி போஜனம், கலப்பு மணம் பற்றி மகாத்மா சொன்னதாவது:- 
காங்கிரஸின் மனப்பான்மை எனக்குத் தெரிந்த அளவில் சமபந்தி போஜனம் சம்பந்தமாக எனக்கும் காங்கிரஸýக்கும் அபிப்ராய பேதம் இல்லை. ஆனால் ஒருவன் தானும் ஹரிஜனங்களில் ஒருவனே என்று பாவிக்காத வரையில் தீண்டாமையைப் போக்க முடியாது. ஹரிஜனப் பெண்ணை ஒருவர் (உயர்ந்த வகுப்பினர் எனப்படுவோர்) மணந்து கொள்ளாத கல்யாணத்துக்கு நான் ஆசி அனுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒரு ஹரிஜனை விவாகம் செய்து கொள்வது அவ்வளவு கஷ்டமில்லை; கஷ்டமெல்லாம் நாமாக மனதில் கற்பனை செய்து கொள்வதே.

தினமணி (03-01-1946)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT