இறைவழி மருத்துவம்

20. உடல் நோய், மனநோய்

நோய் எங்கிருக்கிறது? அது எவ்விதம் உருவாகிறது, நோயை உடல் நோய், என்றும் மனநோய் என்றும் பிரிக்கிறோமே. அப்படி என்றால் என்ன?

டாக்டர் கனகசபாபதி

நோய் எங்கிருக்கிறது? அது எவ்விதம் உருவாகிறது, நோயை உடல் நோய், என்றும் மனநோய் என்றும் பிரிக்கிறோமே. அப்படி என்றால் என்ன?

உடல் நோய் என்பது நாம் நம்முடைய புறக்கண்களால் பார்ப்பது. மனத்தால் உணர்வது. கை கால்களில் வலி, வீக்கம், அரிப்பு, புண்கள், தோல்களில் நிறம் மாறுதல்,கண்கள் நிறம் மாறுதல், சிறுநீர், மலம் முதலியவை நிறம் மாறுவதும், அதிகமாக, குறைவாக, மலம், நீர் கழிப்பது.

மனநோய் என்பது தன்னைத் தானே அறிய முடியாமல் போவது. தான் யார் என்று தெரியாது. உலகத்திலுள்ள எந்தப் பொருளையும், தன் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் போவது. பசி, தாகம், களைப்பு, உறக்கம் எதையும் உணர முடியாமல் போவது.

இந்த உடல் நோய், மன நோய் வருவதற்கு என்ன காரணம்?

உடலில் ஒரு துன்பம் வருவதை மனது அறிந்து கொள்ள முடிந்தால் அது உடல் அளவில் நோய். எப்போது உடலில் ஏற்படும் எந்த மாற்றத்தையும், அறிந்து கொள்ள முடியவில்லையோ அது உடல்நோய்.

நம்மைப் படைத்தவன் இறைவன் அவன் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் எல்லாவற்றையும், உண்மையாக, நியாயமாகப் படைத்திருக்கிறான். பொய் என்பது இல்லை. ஆனால் பொய்யை நிஜம் என்று அறிகிறான். நிஜத்தை பொய்யென்று பார்க்கிறான்.

பாலைவனத்தில் கானல்நீர். அதை தண்ணீர் என்று கருதி அதை நோக்கி போய்க் கொண்டே இருக்கிறான். ஆனால் அவனுக்கு தண்ணீர் கிட்டுவதில்லை.

வாழ்க்கையில் இதுபோன்ற பொய்யை நிஜம் என்று நினைத்து தேடிப் போய்க் கொண்டே இருக்கின்றான். அதாவது நல்ல வாழ்க்கை வாழ்ந்து விடலாம் என்று இறைவனுக்கு புறம்பாக தவறான பாதையில் செல்கிறான். ஆனால் அவன் விரும்பியது கிடைப்பதில்லை. யார் இறைவனுக்கு பொருத்தமாக வாழ்கிறார்களோ, அவர்களுக்கு விரும்பியது கிடைக்கிறது.

வசதியாக வாழலாம் என்று நினைத்து பொருள் சேர்க்கிறார்கள். அந்தப் பொருள் தேடும் ஆசையில் தவறான பாதையில் செல்கிறார்கள்.

நண்பர் ஒருவர், தனியாக கம்பெனியில் வேலை பார்க்கிறார். சில வருடங்கள் கழித்து வியாபாரம் செய்ய விரும்புகிறார். தனியார் பேங்கில் ஆயிரம், இரண்டாயிரம் என்று தனது அக்கவுண்டில் போட்டு வைக்கிறார். தனியார் வங்கிக்காரர்கள் அவரை அணுகி உங்களுக்கு நாலரை லட்சம் கடன் தருகிறோம் அதற்கு உங்கள் சொத்தையோ அல்லது எதையுமே அடமானமாக தர வேண்டியது இல்லை. ஒரு கையெழுத்து மட்டும் போடுங்கள். நீங்கள் வியாபாரம் செய்ய நாலரை லட்சம் தருகிறோம் என்று சொல்லி காலையில் கையெழுத்திடவும், அன்றே அவரது கணக்கில் பணம் வந்துவிட்டது. அந்த பணத்தைக் கொண்டு, தனது பகுதியில், சென்னையில், இரும்பு போன்ற பழைய பொருட்களை வாங்கி விற்பதற்கு, ஒரு கடை ஆரம்பித்தார். வியாபாரம் நடந்து வந்தது. வாங்கிய பணத்தில் பாதி பணத்தை அதாவது இரண்டரை லட்சம் பாங்கிற்கு செலுத்திவிட்டார்.

அவர் இது மட்டுமல்லாது, சீட்டு கம்பெனி நடத்தி வந்தார். ஆனால் சீட்டு எடுத்தவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். எனவே கையிலிருந்து பணம் கொடுக்க வேண்டியதாயிற்று. அவரது பழைய இரும்பு கடை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.

பாங்கில் அதன்பிறகு பணம் கட்ட முடியவில்லை. இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பாங்குகாரர்கள் நோட்டீஸ் அனுப்பி, வட்டி போட்டு நாலரை லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்லி, கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள். இரண்டரை லட்சம் தான் கடன் இருந்தது அது நாலரை லட்சம் ஆகிவிட்டது. பணம் கட்டுவதற்கு வழியே இல்லை. விற்றுக் கொடுப்பதற்குத் தன்னிடம் எந்த சொத்தம் இல்லை.

நன்கு திடகாத்திரமாக இருந்த அவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்யச் சொல்கிறார்கள். அதற்கும் பணம் இல்லை. அரசு மருத்துவமனையில் இன்ஷூரன்ஸ் கார்டு கேட்கிறார்கள். அதிலும் இந்த சிகிச்சைக்கு போதிய பணமில்லை.

வறுமையும் வந்துவிட்டது. நோயும் வந்துவிட்டது. வசதியாக வாழலாம் என்று நினைத்து, வியாபாரம், சீட்டு கம்பெனி என்று தொடங்கி முடிவில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி மீளாத துயரத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

வியாபாரம் என்றால், யாரிடமும் கடன் வாங்காமல் சிறிய அளவில் வியாபாரம் ஆரம்பித்து பயபக்தியோடு நடத்த வேண்டும். வட்டி வாங்கவும் கூடாது. வட்டி கொடுக்கவும் கூடாது. வட்டி அநியாயம் என்று தெரியவில்லை. தன்னுடைய பணத்தில் வியாபாரம் ஆரம்பிக்காமல், அடுத்தவர் பணத்தில் வட்டிக் கொடுத்து ஆரம்பிப்பது தவறு. எந்த வங்கியும் நல்ல நோக்கத்தில் கொடுப்பது இல்லை. அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுகிறார்கள். தலைகுனிந்து அவமானத்தில் வாழும்போது எந்த நோய்தான் வராது.

தினமும் பயமும், கவலையும், மானத்தோடு வாழமுடியாத நிலைமை. தன் குடும்பத்தையே அழித்து விடுகிறார்கள். ஒருவன் சுமையை மற்றவன் சுமக்க மாட்டான். உறவினர்கள் எவரும் உதவி செய்ய முன்வரவில்லை.

வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் இறைவன் சோதிப்பான். மனிதர்கள் திருந்துவதற்காக இந்த சோதனை. எவர் தவறை உணர்ந்து திருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்களோ, இறைவன் என்னை பாதுகாப்பான் அவன் எனக்கு உதவி செய்வான் என்று முழுமையாக இறைவன் பக்கம் திரும்புகிறார்களோ அவர்களுக்கு இறைவன் உதவி செய்வான்.

மருந்து சாப்பிடுவதால் அவருக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு நோய் சரியாகிவிடுமா? அவருக்கு இப்போது என்ன தேவை? கடன் தீர வேண்டும் அந்த கடனை அடைக்க யாரால் முடியும்?

இறைவனால் அந்த கடனை தீர்க்க முடியாதா. மலை போன்ற துன்பமும் பனி போல விலகுமே.

ஒருவர் தன்னுடைய நாற்பது வயதில் சர்க்கரை நோய் ஆரம்பித்திருக்கிறது என்று தினமும் காலையில் நடை ஓட்டம் ஆரம்பித்தார். காலில் ஷூ போட்டுக் கொள்வார். டிரவுசர் அணிந்து கொள்வார். தினமும் தவறாமல் நடையும், ஓட்டமும் பயிற்சி செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சென்றன. அவரால் இடது காலை ஊன்றி நடக்க முடியவில்லை. மூட்டில் வலி என்று டாக்டர்களிடம் சென்றால், மூலிகை மருந்து, தைலம் எதுவும் பிரயோசனமில்லை இப்போது 65 வயது ஆகியுள்ளது எங்கேயும் நடந்து போவது சிரமம்.

இடைப்பட்ட காலத்தில் சர்க்கரை மாத்திரை மிகவும் ஒழுங்காக சாப்பிட்டு வந்தார். ஜூரம் வரும். திடீரென்று கை கால் வலி வரும். டாக்டர் சொல்கிறபடி மாத்திரை வாங்கி சாப்பிடுவார். குடும்ப டாக்டர். அவரிடம் தொடர்ந்து சிகிச்சை.

சில காலம் முன்பு காதில் சீழ் வந்தது. ஏராளமான மாத்திரைகள் மருந்தில் சீழ் அடங்கியது. ஆனால் காது கேட்பது விட்டது.

வாழ்க்கையே கானல் நீராகிவிட்டது. அவருக்கு எவர் ஆறுதல் சொல்ல முடியும். இறைவன் பக்கம் திரும்ப வேண்டிய காலம் கடந்துவிட்டது.

கண் கெட்ட பிறகு சூரியனை வணங்குதில் பயன் இல்லை. அதாவது இறைவனை வணங்குவதில் அர்த்தம் இல்லை.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT