இறைவழி மருத்துவத்தில், அந்தப் பையன் வயிற்று வலி என்று வரும்போது, அறுவை சிகிச்சை இல்லாமலே சுகமாகுமா? ஆகாதா?
லேசான எளிதான முறையில் விருப்பம் நிறைவேற, ஞானம் மிக்க லேசான முறை காட்டப்படுமா? இல்லையா?
புத்தி இல்லாதவன்தான் கத்தி எடுப்பான்.
அறுவை சிகிச்சை செய்து ஒரு மாத காலம் உணவு இல்லாமல் வாழ்ந்தவர்
அதே மருத்துவமனையில் பணியாற்றும்போது ஏற்பட்ட மற்றுமொரு அனுபவம். MBBS மருத்துவத்தில் பயிற்சி மருத்துவராக இருந்தபோது, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளைக் கவனிக்கும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. புத்தகப் படிப்பு மட்டும்தான். நடைமுறை அனுபவம் கிடையாது. அந்த வார்டில் உள்ள ஒருவருக்கு வயது 40 இருக்கும். அவருக்கு இரைப்பையில் ஓட்டை அடைக்கப்பட்டிருந்தது. இது நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இதுபோன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு 10 நாட்களுக்கு வாய் வழியாக உணவு கொடுக்கப்படும். ஆனால் இவருக்கு ஒரு மாதம் ஆகியும் உணவு கொடுக்கப்படாமல், மூக்கின் வழியாக ஒரு ரப்பர் டியூப்பை செலுத்தி வயிற்றுக்குள் சுரக்கும் திரவத்தை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார்கள். கையில் குளுக்கோஸை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நாள் உணவு இல்லை என்றாலே துவண்டுவிடுவோம். ஒரு மாதம் என்றால் யூகித்துக்கொள்ளுங்கள். பேசும் திறனற்று, நடக்கும் சக்தியற்று, படுத்த படுக்கையாக இருந்தார். ஆபரேஷன் முடிந்த பிறகு 10 நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட வயிற்று எக்ஸ்ரேயை பார்த்தேன். வயிற்றுக்குள் ஒரு பெரிய தேங்காய் அளவுக்கு வெள்ளை வெளேர் என்று ஒரு பொருள் காணப்பட்டது.
இரைப்பைக்குள் உள்ள ஓட்டையை அடைத்துவிட்டு, அந்த ஓட்டை வழியாக வெளியேறும், குடலுக்கு இருபுறமும் தங்கியிருக்கும் மலக்கழிவுகளை முழுமையாக நீக்கிவிட வேண்டும். பின்பு வயிற்றின் இருபுறமும் ரப்பர் குழாயை வைத்து, வயிற்றை தைத்துவிட வேண்டும். அந்த ரப்பர் குழாய், வயிற்றின் இருபுறமும் நீட்டிக்கொண்டிருக்கும். அதன்வழியாக வயிற்றில் தங்கியிருக்கும் திரவ வடிவ கழிவுகள் எல்லாம் ஒரு வாரத்தில் வந்துவிடும். இந்த நோயாளிக்கு திடக் கழிவுகளை முழுமையாக நீக்காமல் விட்டுவிட்டார்கள். அது வயிற்றிலேயே தங்கிவிட்டது. அதனால் குடல் வேலை செய்யவில்லை. அதனால் இவருக்கு வாய் வழியாக உணவு வழங்கப்படவில்லை.
இறைவன் காப்பாற்றினான்
இவருக்கு செய்ய வேண்டியது ஒன்று. மீண்டும் வயிற்றை திறந்து, அந்தக் கழிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் வயிற்றைத் தைக்க வேண்டும். அல்லது மலம் போகும் பாதை வழியாக, அறுவை சிகிசை நிபுணர் தன் கையில் உறையை மாட்டிக்கொண்டு, அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இன்ச் அகலமுள்ள பிளேடால், குடலைப் போர்த்தி இருக்கும் பெரிடோனியம் என்னும் சவ்வை கிழித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால், குடலுக்கு வெளியே உள்ள கழிவுகள் எல்லாம் வெளியேறிவிடும். இது எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம்.
அடுத்த நாள் காலையில் வேலைக்கு வந்ததும், அந்த நோயாளியின் அருகில் ஒரு டேபிளைப் போட்டு அமர்ந்துகொண்டு, மேலே சொன்னதை செய்து முடித்தேன். கழிவுகள் முழுவதும் வெளியேறியது. மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், வழக்கம்போல் அந்த நோயாளியைப் பார்க்க வந்தார். அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நோயாளி எழுந்து உட்கார்ந்திருந்தார். உடனே அவர், ‘மிகவும் நன்றாகிவிட்டாயே’ என்று அந்த நோயாளிக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் மெதுவாக அவரிடம் நடந்ததைக் கூறினேன். மிகவும் அதிர்ச்சி அடைந்தார். நான் இந்தக் காரியம் செய்வதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவில்லை. அனுமதி கேட்டாலும், பயந்து அனுமதி கொடுக்கமாட்டார்கள். இது மிகவும் ஆபத்தான செயல். நோயாளி நன்றாகக் குணமாக வேண்டுமே என்ற நல்ல எண்ணத்துக்காக இறைவன் செய்த உதவிதானே இது. இறைவன், என்னையும் காப்பாற்றினான். அந்த நோயாளியையும் காப்பாற்றினான் என்றுதான் சொல்ல வேண்டும்.
நல்ல எண்ணம், நல்ல விருப்பம், நிறைவேற்றுவது இறைவனின் கடமையாகிறது. எவ்வளவு கடினமான வழிமுறை என்று பாருங்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எத்தனையோ பேர் இறந்துள்ளார்கள். குற்றுயிரும், குலை உயிருமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இது நன்றாகவே விளங்கும்.
நினைத்தால் சுகம், இறைவழி மருத்துவம். அதை விரும்புங்கள். இறைவன் கற்பிப்பான்.
தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.