இறைவழி மருத்துவம்

15. இறைவன் மிகப் பெரியவன்

மனிதன் எதை விரும்புகிறானோ அது அவனுக்கு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்ன மாதிரி வாழ வேண்டும்

டாக்டர் கனகசபாபதி

மனிதன் எதை விரும்புகிறானோ அது அவனுக்கு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்ன மாதிரி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அது கிடைத்துவிடுகிறது. ‘விரும்பியதை தருகிறேன் நீ விரும்பிய யாவற்றையும் தருகிறேன்.’ இது இறை வாக்கு. யார் தனது விருப்பத்தில் அது நிறைவேற வேண்டுமே என்று விரும்பி, நம்பி, உறுதியாய் இருக்கிறார்களோ, அவர்களுக்கு அது நிறைவேறுகிறது. யார் அதில் உறுதியாக இருக்கவில்லையோ, அதாவது உலகத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, ‘இதுதான் உங்களுக்கு கிடைக்கவில்லையே,’ இன்னும் ஏன் முயற்சி செய்கிறீர்கள்? என்ற வாசகங்களை கேட்டு தங்களது விருப்பம் நிறைவேறாது என்று முடிவு செய்வர். ஒரு விருப்பம் மனத்தில் உருவாகிறது. அது நன்மையான விருப்பம்தான். அதில் தீமை இல்லை என்று உணரும் போது, அதன் மேல் உறுதி கொள்ள வேண்டும்.

அடுத்த கேள்வி எழுகிறது. ஆசை கொள்ளலாமா? ஆசை என்பது அடுத்தவர் பொருள் மேல் ஆசை கொள்வது சரியில்லை. பெரும்பாலும் அடுத்தவர்களின் பைக், கார், உடை, வீடு, நிலம், மொத்தத்தில் பெரும்பாலும் பொருட்கள், கண்ணால் பார்க்கும் பொருட்கள், அடுத்தவர் உடமையாகவே இருக்கின்றன. அதைப் பார்த்த உடனே ஆசை வருகிறது. அப்போது தான் மனிதனுக்கு துன்பம் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஆனால் விருப்பம் என்பது தனது அவசிய தேவைகள் அடிப்படையில் உருவாகிறது. அது உருவம் இல்லாதது. எனக்கு நல்ல உணவு வேண்டும். அழகான தூய்மையான ஆடை வேண்டும். வசிப்பதற்கு விசாலமான இடம் வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வீட்டைப் பார்த்து இது மாதிரி வீடு வேண்டும். ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பெயரிடப்பட்ட ஆடை வேண்டும். இது உருவம் அமைப்பது. இறைவன் ஒரு சிறந்த உணவை அளிக்கவே நாடினான். சிறந்த உடையை, நல்ல வசதியோடு வாழும் இடத்தையும் அமைத்து தர விரும்பினான். அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவன் அளிப்பதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படி ஒரு குருவிக்கு வீட்டை அமைத்துத் தருகிறானோ, அதே போன்று படைத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும், அது வாழ்வதற்கான இடத்தை அமைத்து தருகிறான். எனவே அனைத்து தேவைகளும் விருப்பங்களாக அமைகின்றன. அந்த விருப்பம் நிறைவேற வேண்டுபவர்களாக இருக்க வேண்டும். அந்த வேண்டுதலே பிரார்த்தனை. ஒரு பொருளை நினைத்துக் கொண்டு அது நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திப்பது பிரார்த்தனை அல்ல. அந்த பிரார்த்தனையிலேயே லயித்திருப்பது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தியானம். மேற்கே பார்த்தோ, கிழக்கே பார்த்தோ கண்ணை மூடிக் கொண்டோ, உலகத்தையே மறந்து விட்டோ அமர்வது தியானம் அல்ல. தெரியாத விஷயத்திற்காக, தெளிவடைய வேண்டி, கேள்வி கேட்டு ஏன்? எதற்காக? எப்படி? அதில் என்ன உண்மை இருக்கிறது? அந்த வார்த்தைக்கு பொருள் என்ன? எதனால் இது நடக்கிறது? என்ற கேள்விக்கு பதில் கேட்டு அமர்ந்திருப்பது தியானம். இது வரை தெரியாத விஷயத்தை அறிந்து கொள்வது, தியானத்தில் கிடைப்பது தியானம்.

ஒரு குழந்தை தாய் வயிற்றில் உருவாகிறது. கர்ப்பப் பையை விட்டு வெளியே வரும் போது அது உயிரோடு இருக்கிறதா? இல்லையா? அது பிறக்கும் போது உயிரோடு இல்லை என்பதே உண்மை. வயிற்றுக்குள் ஏற்படும் அசைவுகள் எல்லாம் கர்ப்பப் பையானது சுருங்கி குறைவதாலும், விரிந்து அதிகரிப்பதாலும் தான். அந்த கர்ப்பப்பையில் அலை அலையாக ஏற்படும் அந்த அசைவுகள் தான் வயிற்றில் வளரும் குழந்தை அசைவது போலத் தோன்றுகிறது. எல்லா உறுப்புகளும் 10 மாதத்திற்குள் உருவாகி விடும். இருதயமும் துடிக்க ஆரம்பிக்கிறது. உடல், சிறுநீரகம் எல்லாமே வேலை செய்ய ஆரம்பிக்கிறது. எப்போது சுவாச பைக்குள் காற்று செல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போது தான் உயிர் உண்டாகிறது. முதல் சுவாசம், அதாவது முதலாவதாக நுரையீரல் சுருங்கி விரிகிறது. குழந்தை பிறந்த பின்பு தான் குழந்தை எப்போது முதல் மூச்சை சுவாசிக்கிறதோ, அப்போதுதான் குழந்தை அழும். அதுவரை குழந்தை அழாது. அந்த முதல் சுவாசம் இறங்காவிடில் அந்த குழந்தை வாழ முடியாது. அது இறந்து போன குழந்தை. குழந்தை கர்ப்பபை வாய் வழியாக வெளியே வர வேண்டும். வயிற்றை கிழித்து அதாவது சிசேரியன் ஆபரேஷன் செய்து அதன் வழியே வெளியே வரக் கூடாது. கர்ப்பப் பை வாசலில் அங்கே வாழக் கூடிய நுண்ணுயிர்கள் எல்லாம், பிறக்கும் குழந்தையின் உடலில் பட்டுதான் வெளியே வர வேண்டும்.

இறைவன் தான் விரும்பியவர்க்கு ஒரு குழந்தையோ, இன்னும் ஏராளமான குழந்தைகளோ கொடுக்கலாம். இன்னும் சிலருக்கு குழந்தையை கொடுக்காமலும் விட்டு விடுகிறான். மனிதன் அதை விரும்புகிறானா அது கிடைக்கப்பெறுகிறான். குழந்தை என்பது அருள். அருளை விரும்பும் மனிதனுக்கு அருளும், பொருளை விரும்பும் மனிதனுக்கு பொருளும் கிடைக்கிறது. சோதனைக் குழாயில் குழந்தை படைப்பது நமது வீட்டுக்குத் தோட்டத்தில் தேக்கு மரம் வளர்ப்பது போலத்தான்.

வீட்டுக்கு ஒரு குழந்தை என்று சீன நாட்டில் ஜனத்தொகையை கட்டுப்படுத்துவதற்காக சட்டம் போட்டார்கள். சட்டம் போட்டு 20 வருடங்களாகிவிட்டது. இப்போது சீனத்தில் வாழும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அண்ணன் கிடையாது. அக்கா, தம்பி, தங்கைகள், அத்தை, சித்தி கிடையாது. உறவுகள் கிடையாது. அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேலே கொண்டு போவதற்கு போதிய பல்வேறு கல்வித் திறனை கொண்டு, எல்லா தொழில்களிலும் ஈடுபடுத்துவதற்கு போதிய இளைஞர்களும் இல்லை. வயதானவர்கள்தான் இருக்கிறார்கள். இறைவன் தான் ஒவ்வொன்றையும் தீர்மானிக்க வேண்டும். மாறாக மனிதர்கள் தீர்மானிக்கும் போது மனிதனே வாழமுடியாத உலகமாக மாறிவிடும். சிசேரியன் ஆபரேஷன் செய்து பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமல் தான் வாழ்கிறார்கள். சிறு வயதிலேயே கண்ணில் கோளாறு. கண்ணாடி போட்டுக் கொள்கிறார்கள். சிறு வயதிலேயே மன உளைச்சல் நோய். மனோதத்துவ டாக்டர்களை பார்த்து மனவியாதிக்கு மருந்து கொடுக்கிறார்கள். சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பு நோயும் வயதான பின்பு வரும் என்பார்கள். இப்போது இளம் வயதிலேயே இன்சுலின் போட்டுக் கொள்கிறார்கள். இளம் வயதிலேயே கொலஸ்ட்ரால், இன்னும் கேன்சர் நோய் என நோய் பிடித்த சமுதாயமாக மாறிவிட்டது. நோயில்லாத சந்ததிகள் வேண்டும் என்று விரும்ப வேண்டும். நமது மனம் எத்தனை குழந்தைகளை விரும்புகிறதோ அத்தனை குழந்தைகளை இறைவன் கொடுப்பான்.

குழந்தை வேண்டுமென்று சொல்வதை விட சந்ததி வேண்டும் என்று சொல்ல வேண்டும். குழந்தை என்று சொல்லும் போது உருவம் வந்து விடும். எனக்கு சந்ததிகள் வேண்டும், எனது வம்சம் பெருக வேண்டும் என்று விரும்ப வேண்டும். மூக்கும் முழியும் ஆன அழகான குழந்தை வேண்டும் என்று விரும்புவதை விட ஞானமுள்ள சந்ததி வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

நாம் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நாம் படைப்புக்களிலே மேலான படைப்பு என்று நினைக்க வேண்டும். மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் உண்டு. மனிதனுக்கு மட்டுமே மனம் என்ற அமைப்பு உண்டு. மனம் இருப்பதால் தான் அவன் மனிதனாகிறான். மனம் என்றாலே அங்கே ஈவு இரக்கம் வேண்டும். பணிவு வேண்டும்.

பிள்ளைகளை பொருளாக பார்க்கக் கூடாது. பிள்ளைகள் வளர்ந்து படித்து எவ்வளவு பொருள் ஈட்டித் தருவார்கள் என நினைக்கக் கூடாது. நமது சந்ததியின் மனம் என்ன விரும்புகிறதோ அதன்படி வாழ உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும். நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்காவிட்டால் நீ என் பிள்ளை இல்லை என்ற போக்கில் செயல்படக் கூடாது. அது இறைவனுடைய படைப்பு. அப்பா, அம்மா, பிள்ளைகள் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறான். நமது பிள்ளைகள் வாழ நாம் உதவி செய்ய வேண்டும்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT