இசை கொண்டாடும் இசை

மறக்கக்கூடிய கலைஞன் அல்ல!

எந்த இயக்குநரையும் தமிழ் சினிமா உலகம் மறக்கலாம். ஆனால் மகேந்திரன் மறக்கக்கூடிய கலைஞன் அல்ல!

DIN

மறக்கக்கூடிய கலைஞன் அல்ல!

‘அச்சாணி’ பட பூஜைக்கு இயக்குநர் மகேந்திரன் வந்திருந்தபோது, எடுத்தப் படம் இது. அவர் ஒரு அற்புதக் கலைஞன். அவருக்கும் எனக்குமான நட்பு மிகச் சிறந்தது. ஒரு கதை சொன்னார். நான் ‘உதிரிப்பூக்கள்’ என்று அதற்குத் தலைப்பு வைத்தேன். அந்தளவுக்கு என் நட்பை விரும்பினார் அவர். நான் அதை மதித்தேன். இதுபோல் அவ்வப்போது அவரின் படங்களுக்குத் தலைப்பு வைத்திருக்கிறேன். மகேந்திரன், நான் என எல்லோருமே ஒன்றாக இருந்துதான் வேலை பார்ப்போம். அவருக்கு எப்போதுமே சினிமா மீது ஒரு உத்வேகம் இருந்துகொண்டே இருக்கும். நானும் அவரை உற்சாகமாக ஊக்குவித்துக்கொண்டே இருப்பேன்.

‘விட்றாதீங்க மகேந்திரன்.. நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு.. பண்ணுங்க.. நல்லா பண்ணுங்க..’ என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரிடம் இருந்த ரசனைதான் எனக்குப் பிடிக்கும். அதுவும் இலக்கிய ரசனை. தேவர் பிலிம்ஸில் கதைகள் செய்யும்போது அது கமர்ஷியல். ஆனால் அவரே இயக்குநராக மாறி கதை செய்யும்போது அது கிளாசிக்கல். இதுதான் மகேந்திரன். அவரின் சொந்த ரசனைக்கு வேறு பக்கம் இருந்தது ஆச்சரியம். வயிற்றுப் பிழைப்புக்காக கமர்ஷியலாக இயக்கிவிட்டு, தமக்காக செய்யும்போதுதான் அவரின் உள்ளக்கிடக்கை வெளியே வந்தது. எந்த இயக்குநரையும் தமிழ் சினிமா உலகம் மறக்கலாம். ஆனால் மகேந்திரன் மறக்கக்கூடிய கலைஞன் அல்ல!

- இளையராஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT