திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 4. அறன் வலியுறுத்தல்   

அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன் சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல், தனக்காகச் செய்ய வேண்டும்.

சிவயோகி சிவகுமார்

அதிகார விளக்கம்

மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம். அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன் சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல், தனக்காகச் செய்ய வேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தைத் தரும்.

31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தின்பால் ஈடுபாடு கொண்டு அதன்படி செயல்படுபவர்களுக்குதான் சிறப்புகளும், செல்வமும் வந்து சேரும்.

32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தைப்போல் உயர்வைத் தருவது வேறு இல்லை. அறத்தை மறுத்தால் உயர்வு இல்லை, கேடுதான் விளையும்.

33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

எங்கெங்கு எப்படியெல்லாம் அறத்தைச் செயல்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் இயன்றவரை அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பு.

34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மனத்தளவில் குற்றம், குறை இல்லாமல் இருப்பதே அறம். மற்ற செயல்கள் எல்லாம் வெறும் சடங்குகளே.

35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன்சொல் இந்த நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.

36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

நேரம் காலம் பார்த்துச் செய்வது அறமாகாது. காலம் கடந்து செய்யப்படும் அறமானது பயனில்லாமல் போய்விடும்.

37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கில் செல்பவனுக்கும், அந்தப் பல்லக்கை சுமப்பவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல்/உணராமல் இருப்பது அறமாகாது.

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 

வாழ்நாளில் மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.

39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

அறச் செயல்களைச் செய்வதால் கிடைப்பதுதான் இன்பம். மற்றவற்றால் கிடைப்பது இன்பமும் இல்லை, புகழும் இல்லை.

40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

அறத்தின்பால் செயல்படும் ஒருவருக்கு, பிறவற்றால் ஏற்படும் பழிகளும் உயர்வைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

நம்பி ஏமாறுபவர்கள் இந்த ராசிக்காரர்கள்!

நேபாள அதிபர் ராம் சந்திர பௌடேல் ராஜிநாமா!

பூங்காற்று... கீர்த்தி சுரேஷ்!

பாபா ராம்தேவ் மீதான வழக்கு: சத்தீஸ்கர் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல்! அடுத்து என்ன?

SCROLL FOR NEXT