ஆசனம் 13. பரத்வாஜ ஆசனம்
பரத்வாஜ முனிவர் கண்டு அருளியதால், அவருடைய பெயருடனே இவ்வாசனம் வழங்கப்படுகிறது.
அஷ்டாங்க யோகம்
இயமம் – கட்டுப்பாடு
பக்திப் பழமான மாப்பிள்ளை
புவனாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமானது. வர்றவன் யோக்கியமானவனாக இருந்தால் போதும் என்பது புவனாவின் பெற்றோர் எண்ணம்.
மது அருந்தக்கூடாது. புகைப் பிடிக்கக்கூடாது. புகையிலை, பீடா, பொடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேடினார்கள். அவன் ஏழையாக இருந்தாலும் சரி, எந்தக் கெட்டப் பழக்கமும் இருக்கக்கூடாது. கடவுள் பக்தி இருந்தா ரொம்ப நல்லது என்ற நிபந்தைனையோடு பணத்தை வீசித் தேடினார்கள்.
ஒருநாள், வீட்டுக்கு புரோக்கர் பொன்னம்பலம் வந்தார். நீங்கள் சொல்ற கண்டிஷனுக்கெல்லாம் பையன் கெடைக்கிறது கஷ்டம் என்றபடி, தன்னிடம் இருந்த ஜாதகங்களை எடுத்தார்.
அப்படின்னா, என்ன பண்ணலாம்…
வெளியூருக்குதான் போகணும். பழநியில அந்த மாதிரி மாப்பிள்ளைங்க நிறைய இருப்பாங்கன்னு சொல்றாங்க. சின்ன வயசில இருந்தே தினமும் மலை ஏறிப்போய் முருகன தரிசனம் பண்றவங்க இருக்காங்கன்னு கேள்வி. அவங்கதான், நீங்க எதிர்பார்க்கற மாதிரி இருப்பாங்க.
கரன்ஸி நோட்டுகளை எடுத்துப்போட்டார் ராஜசேகர்.
அன்று மாலையே பழனிக்கு ரயில் ஏறினார், புரோக்கர் பொன்னம்பலம்.
நாங்க கேட்ட மாதிரியே மாப்பிள்ளை கொண்டுவந்தா உங்களுக்கு நல்லவிதமா செய்யறோம் என்று சொல்லியிருந்தார். அந்த நினைவு, பொன்னம்பலத்தை தூங்கவிடவில்லை. தூக்கமில்லாமல் புரண்டுகொண்டிருந்தார்.
திண்டுக்கல்லில், ரயிலுக்கு அரை மணி நேரம் ‘தலைமாற்றுச் சிகிச்சை’ நடக்கும். ரயிலை விட்டு இறங்கி பிளாட்பாரத்தில் சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தார் பொன்னம்பலம்.
ரயிலுக்கு திரும்பி வந்துபோது, மேலே படுக்கையில் காவிச் சட்டை அணிந்த இளைஞன் ஒருவன் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்.
முகத்தை உற்றுப் பார்த்தார் பொன்னம்பலம்.

பேரு, சரவணபவானந்தன். நல்ல பையன். இந்தாங்க போட்டோ என்று ராஜசேகரிடம் நீட்டினார் பொன்னம்பலம்.
பின்னால் முடிவிட்டிருந்தான். நெற்றி நிறையப் பட்டை, கழுத்தில் ஒரு கொட்டை, காவி நிறத்தில் சட்டை.
சாமியார் மாதிரி இருக்கானே.
சபரிமலைக்குகூட, நல்லா படிச்சவங்களும், நாகரிகமானவங்களும்கூட போறாங்களே.
இவன் சபரிமலை கேஸா? அப்ப வேணாம். அங்க போயிட்டு வர்றவங்கள்லாம், திரும்பி வந்து தண்ணி அடிப்பாங்க என்றார் ராஜசேகர்.
அதனாலதான் அந்தப் பக்கமே போகலை. இது பக்கா பழநி கேஸ். இவன்தான் சரியா இருப்பான். பொண்ண கேட்டுப் பாருங்க.
புவனாவை அழைத்தார்கள்.
ஃபோட்டோவை வாங்கிப் பார்த்த புவனா, பெற்றோரையும் புரோக்கரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
புரோக்கர் தனது பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, இடுப்பு வேட்டியைப் பிடித்தபடி ஓடத் தயாராக இருந்தார்.
நல்ல பையனாப் பாருங்கன்னா, பண்டாரம் மாதிரி பார்த்திருக்கீங்களே?
ராஜசேகர், புரோக்கரைப் பார்த்தார்.
மாப்பிள்ளை, பங்குனி உத்திரத்துக்கு மாலை போட்டிருக்காரு. உத்தரம் கழிஞ்சதுமே கழட்டிடுவாரு. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனா, ஒரே ஒரு மைனஸ் பாயின்ட். மாப்பிள்ளைக்கு பக்தி அதிகம், அவ்வளோதான். சதா கோயில் கொளம்னு சுத்திக்கிட்டே இருப்பாரு. அவரோட சேர்ந்து சுத்தினா, உங்களுக்கும் புண்ணியம்தானே.
மாப்பிள்ளை பக்திப் பழமா இருக்கானேடீ. இவனை கட்டிக்கிட்டு என்னடீ பண்ணுவே என்றாள், தோழி கீர்த்தனா.
அப்பேர்ப்பட்ட துறவியே மேனகாகிட்ட கவிழ்ந்துபோனாரு. இந்தப் பக்திப் பழமெல்லாம் என்கிட்ட ஜுஜூப்பி என்றாள் புவனா.
திருமணம் ஆனது.
மணமகன் வீட்டில் பிரச்னை தலை தூக்கியது.
என்கிட்ட இருந்து அவனை பிரிச்சதுகூடப் பெருசில்ல. முருகனே கதின்னு கிடந்த என் புள்ளை, இப்போ சுத்தமா கோயிலையே மறந்துட்டானே என்று எள்ளும் கொள்ளுமாக வெடித்தார் மாமியார்.
இப்ப என்ன கெட்டுப்போச்சு அத்தை? வீட்டுலயே கும்பிட்டுக்கறாரு. கிருத்திகை அன்னிக்கு மலைக்குப் போகப்போறோம். இது போதாதா? பக்திகூட அளவோட இருக்கணும். அதை அவரே புரிஞ்சிக்கிட்டாரு. நீங்க ஏன் புரிஞ்சிக்காம பொறிஞ்சி தள்றீங்க? என்றாள் புவனா.
எதுவும் அளவோடு இருப்பது இயமம்.

ஆசனம் - 13
பரத்வாஜ ஆசனம்
பெயர்க் காரணம்
பரத்வாஜ முனிவர் கண்டு அருளியதால், அவருடைய பெயருடனே இவ்வாசனம் வழங்கப்படுகிறது.
செய்முறை
முதலில் நேராக அமர்ந்துகொள்ளவும்.
இரண்டு கால்களையும் நேராக நீட்டி வைக்கவும்.
வலது காலை வெளிப்பக்கமாக மடக்கிப் பின்பக்கமாக வைக்கவும்.
இடது காலை முன்பக்கமாக மடக்கி, வலது தொடைக்கு மேலே அடிவயிற்றோடு ஒட்டி வைத்துக்கொள்ளவும்.
இடது கையை முதுகுக்குப் பின்பக்கமாகக் கொண்டுசென்று, இடதுகால் விரலைப் பற்றிக்கொள்ளவும்.
வலது கையை இடது முழங்காலின் மீது வைத்து இழுத்துப் பிடித்துக்கொள்ளவும்.
முகத்தை இடப்பக்கமாத் திருப்பி முதுகைப் பார்ப்பதுபோல், பின்பக்கமாக நன்றாகத் திரும்பியிருக்கவும்.
இதே நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
பின்னர், மெதுவாக முகத்தை நேராகத் திருப்பியவாறு, பின்னால் உள்ள இடது கையை மெதுவாகத் தளர்த்திக்கொண்டு இயல்பு நிலைக்கு வரவும்.
வலது கையையும் தளர்த்திக்கொண்டு வந்து, இடது காலை மெதுவாகக் கீழே எடுத்துவைக்கவும்.
வலது காலையும் இடது காலையும் முன்பக்கமாகச் சேர்த்து நீட்டிவைத்து நன்றாக இளைப்பாறவும்.
கால்களை மாற்றி
இடது காலை வெளிப்பக்கமாக மடக்கிப் பின்பக்கமாக வைக்கவும்.
வலது காலை முன்பக்கமாக மடக்கி, இடது தொடைக்கு மேலே அடிவயிற்றோடு ஒட்டி வைத்துக்கொள்ளவும்.
வலது கையை முதுகுக்குப் பின்பக்கமாகக் கொண்டுசென்று, வலது கால் விரலைப் பற்றிக்கொள்ளவும்.
இடது கையை வலது முழங்காலின் மீது வைத்து இழுத்துப் பிடித்துக்கொள்ளவும்.
முகத்தை வலப்பக்கமாகத் திருப்பி முதுகைப் பார்ப்பதுபோல், பின்பக்கமாக நன்றாகத் திரும்பியிருக்கவும்.
இதே நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
பின்னர், மெதுவாக முகத்தை நேராகத் திருப்பியவாறு, பின்னால் உள்ள வலது கையை மெதுவாகத் தளர்த்திக்கொண்டு இயல்பு நிலைக்கு வரவும்.
இடது கையையும் தளர்த்திக்கொண்டு வந்து, வலது காலை மெதுவாகக் கீழே எடுத்து வைக்கவும்.
இடது காலையும் வலது காலையும் முன்பக்கமாகச் சேர்த்து நீட்டிவைத்து நன்றாக இளைப்பாறவும்.

பலன்கள்

ஜீரண உறுப்புகள் இடவலமாக நன்றாகத் திருக்கி முறுக்கப்படுகின்றன. அதனால் கல்லீரல், மண்ணீரல் நன்றாகப் பிசையப்பட்டு, பித்தநீரும் இன்சுலினும் நன்றாகச் சுரக்கின்றன.

சர்க்கரை நோய் முற்றிலுமாகக் குணமாகிறது.

முதுகுத் தண்டுவடம் முற்றிலுமாக திருக்கி முறுக்கப்படுவதால், எலும்பு தேய்மானக் குறைபாடுகள் வராது.

புத்துணர்ச்சியும் இளமையும் நீடிக்கும்.