ஆசனம் 15. ஹாலாசனம்
மதுரைக்குப் போகும் மெய்யன்பர்கள் கோயிலில் அம்மன் இல்லை என்றால், சன்னதி வீதிக்குச் சென்று ஆதிகாலத்து ஒரிஜினல் நெய்மிட்டாய்க் கடையில் போய்ப் பார்ப்பார்கள்.
அஷ்டாங்க யோகம்
பிரத்யாகாரம்
(மன ஒருமைப்பாடு வேண்டும்)
கிளை விட்டுக் கிளை தாவும் பிறவி
மதுரைக்குப் போகும் மெய்யன்பர்கள் கோயிலில் அம்மன் இல்லை என்றால், சன்னதி வீதிக்குச் சென்று ஆதிகாலத்து ஒரிஜினல் நெய்மிட்டாய்க் கடையில் போய்ப் பார்ப்பார்கள். பிள்ளைத் தமிழ் வடிவாக நின்று, அம்பி ராமய்யர் கடை அல்வாவைத் தின்றுகொண்டிருப்பாள் மீனாட்சி.
அவ்வளவு பிரசித்தம் அந்தக் கடை.
அம்பி ராமய்யர் கடை அல்வா என்றால் ஆவென்று வாய் பிளக்காதவர்கள் இருக்க முடியாது. சுத்தமான சம்பா கோதுமைப் பாலோடு, சுத்தமான பசு நெய் கலந்துநின்று மணம் பரப்பும். இனிப்புச் சுவையா நெய்ச் சுவையா கோதுமைச் சுவையா என்று இனம் கண்டு கொள்வதற்குள்ளே நூறு வயதும் போய்விடும். நெய்யின் நறுமணம் ஒரு வாரத்துக்குக் கையை நீங்காது.
அதேபோல், அம்பி ராமய்யர் கடைப் பூந்தி என்றால் ஆகாயமே வாய் பிளந்து அபகரித்துக்கொள்ளும்.
பெரிய நெல்லிக்காய் சைஸுக்கு மெது மெதுவென்று கடலை மாவு நிறத்திலேயே காட்சியளிக்கும்.
“எண்ணெய் தேய்த்துக்கொண்டு என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்” என்பது அந்தக் கடைப் பூந்திக்கு மட்டுமே பொருந்தும்.
தெள்ளிய மணலைப் போன்ற வெள்ளைச் சர்க்கரை, பூந்தியின் மேனியில் பட்டும் படாமலும் ஒட்டிக்கொண்டிருக்கும். வாயில் போடும்போது மட்டுமே நாவுக்குத் தாவிக்கொள்ளும்!
நீயா நானா என்று இனிப்புக்குப் போட்டியாக, கடைக்குள்ளேயே முறைத்துக்கொண்டு நிற்கும் காரச்சேவு இருக்கிறதே… காரத்துக்கு உச்சகட்டமாகப் பேசப்படும் ஒரே கார வகை அது மட்டுமே! செக்கச் செவேல் என்று மிளகாய் வற்றலின் நிறத்தை அப்படியே தரித்திருக்கும்.
அல்வாவை மென்றவர்கள், மாற்று ஆசனம் போல காரச்சேவை வாயில் போட்டு அரைத்தால்தான் இனிப்பின் கொட்டம் அடங்கும்.
அல்வா, வாயிலிருந்து கீழ்நோக்கிப் பயணித்தால், காரச்சேவு நேர்மாறாக உச்சந்தலைக்குப் போய் புரைக்கேறும்.
தன்வினை தன்னைச் சுடும். உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான். தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான். ஒரு கையில் தண்ணீரைக் கையில் வைத்துக்கொண்டுதான் காரச்சேவை வாயில் போடுவான்.
விளக்கில் மயங்கி நெருப்பில் முட்டிக்கொள்ளும் விட்டில் பூச்சிபோல, அல்வாவைச் சுவைத்தவன் ஆபத்தான காரத்தை வாயில் போடாமல் நகரமாட்டான்.
காலை பத்து மணிக்கு சுடச்சுட கடை விரிப்பார். பன்னிரெண்டு மணிக்குள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும். மீண்டும் மாலை நான்கு மணிக்கு சுடச்சுட கடை திறந்து எட்டு மணிக்கெல்லாம் பூட்டிக்கொண்டு போய்விடுவார்.
அவரது பெட்டிக் கடை அளவுக்குப் பணம் குவிந்துவிடும். கட்டுக் கட்டி எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.
போதாதா?
அம்பி ராமய்யருக்கு முதுமை வந்துவிட்டது. பெற்ற பிள்ளையிடம் கடையை ஒப்படைத்துவிட்டு, சாதனைப் பெருமூச்சோடு கண்களை மூடினார்.
அப்பாவின் வழிமுறைகளைக் கடைப்பிடித்து கடையைப் போற்றியிருக்க வேண்டும் மகன்.
அதைச் செய்யவில்லை.
கிளை விட்டுக் கிளை தாவும் குரங்காக மாறினான்; நகர் எங்கும் கிளைகளைப் பரப்பினான்; கவனம் சிதறியதால் தரம் குறைந்தது; வியாபாரம் நீர்த்துப்போய்விட்டது. ஒருநாள், கடையைப் பூட்டிவிட்டு காணாமல் மறைந்தான்.
இன்று, அம்பி ராமய்யரின் பெயர் சொல்ல ஆளில்லை.
நிலையான தொழிலை திறம்பட நடத்தியிருக்க வேண்டும். கவனச் சிதறல். பறக்க நினைத்து பாதாளத்தில் விழுந்ததுதான் மிச்சம்.
மனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதே பிரத்யாகாரம்.
ஆசனம்
ஹாலாசனம்
செய்முறை
விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.
சுவாசத்தை நன்றாக உள்ளிழுக்கவும்.
சுவாசத்தை வெளியிட்டவாறு, கால்கள் இரண்டையும் மேலே உயர்த்திக்கொண்டே வரவும்.
தலைக்கு மேலே கால்கள் சென்ற பிறகு, மெதுவாக நீட்டிய நிலையில் விரிப்பின் மீது வைத்துவிடவும்.
இதே நிலையில் சுமார் பத்து சுவாசங்கள் இருக்கவும்.
பின்னர் மெதுவாகக் கால்களை உயர்த்தி பழைய நிலைக்குக் கால்களை நீட்டிய நிலையிலேயே மெதுவாக இறக்கிக்கொண்டே வரவும்.
மேல் முதுகு, நடு முதுகு, கீழ் முதுகு என்று படிப்படியாக விரிப்பின் மீது உடலை மெதுவாகக் கிடத்தி வைக்கவும்.
நன்றாக இளைப்பாறிய பிறகு மீண்டும் தொடரவும்.
பட்சிமோத்தனாசனம் எத்தனை தடவை செய்தீர்களோ அத்தனை முறை இந்த ஆசனத்தையும் செய்யவும்.

பலன்கள்

இதயம் தலைகீழாக அமைந்து செயலாற்றுவதால், இதயத்தின் மீதான பாரம் குறைகிறது.

நுரையீரல்களும் தலைகீழாக்கப்படுவதால், அதன் அடிப்பாகத்தில் தேங்கியிருக்கும் அசுத்தக் காற்று முற்றிலுமாக அகற்றப்படுகிறது.

தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிகள் நன்றாக அழுத்தப்படுவதால், தைராக்ஸின் என்ற சுரப்பு நீர் நன்றாகச் சுரந்து, உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மூளைக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் அதன் ஆற்றல் பெருகுகிறது.