முகப்பு
யோகம் தரும் யோகம்

ஆசனம் 6. மார்ஜரி

சுந்தரின் கேட்டரிங் சர்வீஸ் படு அமர்க்களமாகப் போய்க்கொண்டிருந்தது. “சுந்தரா கேட்டரர்ஸ்” அயிட்டங்கள் என்றால் எவரையுமே அசைத்துவிடும்! அவ்வளவு சுவை, சுத்தம், தரம், நியாயமான விலை.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:08 PM
பகிர்:

அஷ்டாங்க யோகம்
தாரணை (குறிக்கோள்)

மனம் போல் வாழ்வு

சுந்தரின் கேட்டரிங் சர்வீஸ் படு அமர்க்களமாகப் போய்க்கொண்டிருந்தது. “சுந்தரா கேட்டரர்ஸ்” அயிட்டங்கள் என்றால் எவரையுமே அசைத்துவிடும்! அவ்வளவு சுவை, சுத்தம், தரம், நியாயமான விலை.

நகரிலேயே அவனது கேட்டரிங்தான் முன்னணி. ஐந்து நட்சத்திர ஓட்டல்காரர்களே தங்கள் அரங்கில் நடக்கும் விழாக்களுக்கு “சுந்தர் கேட்டரர்ஸ்” வந்தால் பெருமையாக இருக்கும் என்று கருதும்படியாகிவிட்டது.

பிரபலமான சைவ உணவகங்கள்கூட இவனோடு போட்டி போட முடியாமல் பின்வாங்கின.

இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறான்னா, இவன் கேரளாவுல இருந்து ஏதோ மந்திரவாதியைக் கூப்பிட்டு வந்து மாந்திரீக வேலை பண்ணியிருக்கான். அந்த மந்திரவாதி யாருன்னு கண்டுபிடிச்சா, அவனுக்கு இவனைவிடக் கூடுதலா பணம் குடுத்து நம்முடைய ஹோட்டலையும் அதைவிட பாப்புலர் ஆக்கிடலாம் என்று போட்டி கேட்டரிங் நபர் முயற்சித்தார். அவரது ஆட்கள் கேரளாவுக்கே போய், முன்னணி மாந்திரீகனைத் தூக்கிக்கொண்டு வந்து விசேஷ பூஜைகள் நடத்தினார்கள். இப்ப என்ன நடக்குது பாருடா என்று சுந்தரத்துக்கு சவால் விட்டு கர்ஜித்தார்.

அடுத்தநாளே, அந்த ஹோட்டல் சாம்பார் ஊரெல்லாம் நாறியது.

சாம்பாருக்குள் ஒரு சுண்டெலி கிடந்த செய்தி காட்டுத்தீ போலப் பரவி, டிவிக்காரர்கள் வந்து சுண்டெலியைப் பெருச்சாளியாக்கிவிட்டார்கள்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கைப் பிடிக்க வைத்துவிட்டான் மந்திரவாதி என்று கேரளத்து மாந்திரீகனை உதைக்கப்போனார்கள்.

“ஈ நம்பூதிரியோட மந்திரத்தை குறைச்சி மதிக்காதே பட்டீ. அது வல்லியதா வேலை செய்யுதாக்கும். பட்சே, மந்திரத்தை மனசுல நெனைச்சுட்டு புள்ளிகள்லாம் எலிகள் வர்றதுகூட நோக்காம ஜோலி செஞ்சதாக்கும். பின்னே மந்திரம் என்ன செய்யும் மவனே. மதியுண்டு அல்லோ, சித்தே யோசிக்கணும். இப்பவே போய்க்கோடா பட்டி. ஏதாங்கில் இவடே தாமசிச்சங்கில் எங்கட பரிவார தெய்வங்கள் வந்து புள்ளிய நாசப்படுத்திடுமாக்கும். ஜாக்ரதை. போய்க்கோ... அடப் போய்க்கோடா’’ என்று கத்தவும், பயந்துகொண்டு திரும்பினர்.

அதே சமயம் -

ஒரு தொலைக்காட்சிக்கு சுந்தரம் பேட்டி அளித்துக்கொண்டிருந்தான்.

“ஏழைக் குடும்பம்தான். சின்ன வயசுல எனக்கு ஒரு வேளை சோறு மட்டும்தான் வீட்டில் இருக்கும். ஒரு தட்டுல போட்டுவெச்சிட்டு அம்மா வேலைக்குப் போயிடுவாங்க. என்னை மாதிரியே ஒரு ஏழை நண்பனோடதான் வீட்டுக்கு வருவேன். இருக்கறதை அவனோட பகிர்ந்து சாப்பிடுவேன். அந்த சின்ன வயசுல இருந்தே, மத்தவங்களை பசியாத்திட்டு சாப்பிடறதை வழக்கமாவே வெச்சிருக்கேன். நான் ஓட்டல் பிஸினஸ் பண்ணணும்னு கனவுகூடக் கண்டதில்ல.

சாப்பிடறவங்க யாரா இருந்தாலும், அவங்க வயிறும் மனசும் நெறையணும். அதைப்பார்த்து நான் சந்தோஷப்படணும். அதுவே எனக்குத் தொழிலா அமைஞ்சுபோச்சு. பசி வரும்போது நல்லவனும் இல்லை; கெட்டவனும் இல்லை. என் ஹோட்டலுக்கு வர்றவங்க எல்லாருமே மனநிறைவோட சாப்பிட்டுப் போறாங்க. எந்த விஷயத்துல எவ்வளவு தூரம் உண்மையா இருக்கோமோ, அந்த விஷயத்துல நிச்சயமாக ஒருநாள் முன்னணியில இருப்போம். யாராயிருந்தாலும் சரி. எண்ணங்கள் சரியா இருந்தா, குறிக்கோள் எதுவானாலும் நிறைவேறும், அதுதான் நான் கத்துக்கிட்ட பாடம்”.

ஆசனம் 6. மார்ஜரி

மார்ஜரி என்றால் ‘பூனை’ என்று பொருள். பூனை, நாய்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்தவுடன், தங்கள் உடலை முன்னும் பின்னும் நீட்டியும் குறுக்கியும் சில பயிற்சிகளை மேற்கொள்ளும். அதனால் அவை உடனுக்குடனாக உற்சாகத்தைப் பெற்றுவிடும்.

செய்முறை

• மண்டியிட்டு முழங்கால்களில் நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும் இரண்டு அடி தூரத்தில் முன்பக்கமாக வைத்து ஊன்றி நிற்கவும். இந்த நிலையில், நமது உடல் ஒரு நான்கு கால் விலங்கைப்போல் இருக்கும்.

• முகத்தை உயர்த்திப் பார்க்கவும்.

• இயல்பான சுவாசத்தில் இருக்கவும்.

• பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறு, உடலைப் பின்பக்கமாகக் கொண்டுவந்து தலையைக் குனியவும்.

• நெற்றி, தரையைத் தொடுவதுபோல வைக்கவும்.

• கைகள் இரண்டும் நீட்டிய நிலையில் இருத்தல் வேண்டும்.

• பிறகு சுவாசத்தை உள்ளிழுத்தவாறு, மார்பை முன்பக்கமாக உயர்த்திக்கொண்டே சென்று கைகளால் தாங்கி நிறுத்தவும்.

• முகம் மேல்நோக்கிப் பார்த்தபடி இருக்கவும். பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறு மீண்டும் பின்பக்கமாகச் செல்லவும்.

• மறுபடியும் முன்பக்கமாக நீட்டியபடி வரவும்.

• பின்னர் பின்பக்கமாக.

• மீண்டும் முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் போய்வரவும்.

• இவ்வாறாக சுமார் ஐந்து முறை செய்யவும்.

பலன்கள்

இந்த ஆசனத்தால், உடல் முழுமைக்கும் ரத்த ஓட்டம் தூண்டப்படும்.

எலும்புகளின் இணைப்புகளில் எண்ணெய்ப் பசை சுரந்து தேய்மானங்கள் குறையும்.

எலும்புகளின் மூட்டு இணைப்புகள் எளிதாகச் செயல்படும். தசை நார்கள் அனைத்தும் வலிமையுறும். அதனால் உடனடியாக உற்காகம் கிடைக்கிறது.

உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.