கருத்துக் களம்

மருந்துகள் தட்டுப்பாடு; கவனிக்குமா தமிழக அரசு?

சித்தம், ஆயுர்வேதம்,யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளுக்கான மருத்துவ கல்லூரிகளை அரசே நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் ஹோமியோப

ஐவி.நாகராஜன்

சித்தம், ஆயுர்வேதம்,யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளுக்கான மருத்துவ கல்லூரிகளை அரசே நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் ஹோமியோபதி மருத்துவத்தையும வளர்த்தெடுக்க இப்போதுள்ள அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும் 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி இந்திய மருத்துவ ஹோமியோபதி பல்கலைக்கழம் இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய அம்சம். இன்னொருபுறம் ஏற்கெனவே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவமனைகளின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த மருத்துவமனைகளில் கடும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அன்றாடம் செய்திகள் வருகின்றன. இத்தகைய தட்டுப்பாட்டின் காரணமாக ஏழை நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு பலமுறை சுட்டிகாட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதிய அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள ஆயுர்வேத, சித்த யுனானி மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களாக மருந்துகள் இருப்பில் இல்லை என்பது தெரிய வருகிறது. இதனால் தேவைப்படும் மருந்துகளை வெளியிலுள்ள கடைகளில் அதிக விலையில் வாங்கிக் கொள்ளும்படி ஏழை நோயாளிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை மக்களை, மருந்து இருப்பில் இல்லை என்று கூறி அலோபதி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் பணியாற்றுவதற்கான மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாகுறையும் உள்ளது என்ற தகவலும் கிடைக்கிறது.

ஆயுர்வேதம், யுனானி, சித்தா ஆகிய இந்திய மருத்துவமுறைகள் தனிச் சிறப்பு மிக்கது என்பதை எவராலும் மறுக்க முடியாது. நோயால் பாதிக்கப்படுபவர்கள் தனக்கு தேவையான மருத்துவமுறையை தேர்வு செய்து கொள்வது அவரது தனிப்பட்ட உரிமையாகும். ஒரு மருத்துவமுறையை பெற்றுவரும் நோயாளிகள் வேறொரு மருத்துவமுறை மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு மருத்துவர்களே அனுமதிப்பதுண்டு.

ஆனால் இந்திய மருத்துவமுறைகள் பொது மக்களிடமிருந்து விலக்கப்பட வேண்டும் என்ற மறைமுக நோக்கில்  திட்டமிட்டே இந்திய மருந்துகள் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக தெரியவருகிறது. இதன் பின்னணியில், அரசு மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவமுறைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாட்டை தமிழக அரசு உற்று கவனிப்பது நல்லது. நோயாளிகள் எந்த வியாதியை தாங்கி வந்தாலும் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே மருத்துவ சமூகத்தின் விருப்பமாக இருக்க வேண்டும். இந்த நல்ல சிந்தனை இல்லாவிட்டால் போலி மருந்துகளும் பல்வேறு கூட்டுக் கலவை மருந்து முறைகளும் பின்பற்றப்பட்டு மருத்துவ சமூகமே சீரழிந்துவிடும். இப்போதைய நிலையில் குளிர்காலமாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட மருத்துவமனைகளில் பெரும்பாலானவர்கள் ஆஸ்துமா, சளி, காய்ச்சல், மூட்டுவீக்க வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சைக்காக வருவது அதிகரித்து வருகிறது.

 இந்த நோயாளிகளை மருந்து இல்லை என திருப்பி அனுப்பினால் விபரீதமான பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற  சூழ்நிலையிலாவது தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும். தேவையான மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவப் பிரிவுகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்திட வேண்டும். ஏற்கெனவே இருப்பதை குறைபாடுகள் இல்லாமல் சிறப்பாக செயல்பட செய்வதை விட்டுவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT