இருட்டில் வெளிச்சத்தைத் தொலைத்தவர்கள்...
பண்டைய மக்களுக்கு நாட்டியம், கூத்து,நாடகம் மட்டுமே கலைவடிவமாக பொழுதுபோக்கின. இவை யாவுமே அசையும் வடிவமாக - திரைப்படங்களாக உருவெடுத்தபோது பிரமிப்பாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
பண்டைய மக்களுக்கு நாட்டியம், கூத்து,நாடகம் மட்டுமே கலைவடிவமாக பொழுதுபோக்கின. இவை யாவுமே அசையும் வடிவமாக - திரைப்படங்களாக உருவெடுத்தபோது பிரமிப்பாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் மக்களோடு ஈருடல் ஓருயிராக ஐக்கியமானதால் மனிதன் அசைவற்ற பொருளானான். மூளைக்கு வேலையில்லாமல் பொழுதுபோக்க திரைப்படம் சுலபமாயிருக்கிறதே - இது சரியா?
திரைப்படம் மட்டுமே பொழுதுபோக்கு என்பது சரியல்ல; ஓவியம், இலக்கியம், கவிதை, சுற்றுலா, விளையாட்டு, சிற்பக்கலை என்று ரசிக்க எத்தனையோ கலை வடிவங்கள் இருக்க, தொடர்ந்து திரையரங்க இருட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது வளர்ச்சி தருமா?
Advertisement
கே.எஸ். ரவிக்குமாரைத் தெரிந்தவருக்கு எஸ். ராமகிருஷ்ணனைத் தெரியாது. கே.ஜே. யேசுதாûஸத் தெரிந்தவருக்கு கே.ஏ. குணசேகரனைத் தெரியாது. ரஜினிகாந்தின் ரிஷிமூலம் தெரிந்தவருக்கு ஓவியர் ஆதிமூலம் யார் என்று தெரியாது.
"சொல்லுங்கண்ணே சொல்லுங்க' இமான் அண்ணாச்சி தொகுத்துத்தரும் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது அறிவு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்று பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் மட்டும்தான் என்றில்லை ஆசிரிய, ஆசிரியைகளும் சாதாரண விஷயங்களைக்கூடத் தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது வேதனையைத்தான் வளர்க்கிறது.
சின்னத்திரை, பெரிய திரை என்று போட்டி போட்டு ரசிக்கும் தமிழர்கள் - அதிலும் குறிப்பாக இளைஞர்கள் - திரைப்படம் பார்ப்பதில் பொழுதைக் கழிப்பதைவிட அதைப்பற்றிப் பேசுவதிலேயே பெரும்பகுதியை வெட்டியாகக் கழித்தால் "ஏழாம் அறிவு' என்னத்துக்கு?
- இப்படிப்பட்டவர்களிடம் "வாக்குரிமை' இருப்பதால்தான் அமைகின்ற அரசுகளும் "வக்கற்றதாகவே' அமைகின்றன.
வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களால் நமக்கு விடியல் கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தால் "அரங்க இருட்டு' வெளியிலும் அப்படியே தொடரும்.
தமிழ் இனம் விழித்துக்கொண்டால்தான் புதிய விடியலே பிறக்கும்.