அசைவ வகைகள்

காஜூ (முந்திரி) சிக்கன்

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்

ஸ்ரீனிவாசன்

தேவையான பொருட்கள்

முந்திரி - 150 கிராம்

சிக்கன் - 500 கிராம்

கடுகி - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பட்டை - 2

கிராம்பு - 6

ஏலக்காய் - 3

வெங்காயம் - 2

ஜாதி பத்திரி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1

அன்னாசிப் பூ - 1

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பாதாம் - 2 டீஸ்பூன்

கசகசா - 50 கிராம்

செய்முறை

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா, இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்த பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, புக்கா, நான், ரொட்டி, புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT