தேவையானவை:
பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
வால்நட் - அரை கிண்ணம்
சர்க்கரை - 1 1/4 கிண்ணம்
பால் - 1/4 கிண்ணம்
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
செய்முறை:
பாதாம் பருப்பையும், வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோல்நீக்கி, பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஓர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, சர்க்கரை,வெண்ணெய்,ஏலக்காய்த்தூள், ஆப்பசோடா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே அடுப்பில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, அடுப்பை அணைத்து, நெய் தடவி தயராக வைத்து உள்ள தட்டில் கொட்ட வேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம். பாதாம் வால்நட் பர்ஃபி ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.