இனிப்பு வகைகள்

இனிப்பு சோமாஸ்

அதனுள் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து மூடி வைக்கவும்.

தவநிதி


தேவையானவை:
பூரணம் செய்ய:
வறுத்த  வெள்ளை எள் - 2 மேசைக்கரண்டி
துருவியத் தேங்காய் - அரை முடி
சர்க்கரை - 3/4 டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் - 6
மாவு தயாரிக்க:
மைதா மாவு - 1/4 கிலோ
ரவை - 1/4 கிண்ணம்
சோடா உப்பு -2 சிட்டிகை
உப்பு -  2 சிட்டிகை
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை எடுத்துக் கொண்டு அதில் ரவை, சோடா உப்பு, உப்பு சேர்த்து  வெண்ணெய்  உருக்கி ஊற்றி நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும்  பொடித்த முந்திரி, பாதாம் பருப்பு, வெள்ளை எள், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கவும். இறுதியாக சர்க்கரையைச் சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை சற்று கெட்டியாக இருக்கும் போதே எடுத்து  ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.

பின்னர், பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி , சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான சப்பாத்தியாக தேய்த்து அதை எடுத்து சோமாஸ் செய்யும் அச்சில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் பூரணத்தை வைத்து மூடி வைக்கவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, செய்து வைத்திருக்கும் சோமாசை, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.இனிப்பு சோமாஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT